Published:Updated:

அழகழகாய் 7 குஞ்சுகளை ஈன்ற அரியவகை தென்னாப்பிரிக்க முதலை! - வடநெம்மேலி பண்ணையில் ஆச்சர்யம்

அழகழகாய் 7 குஞ்சுகளை ஈன்ற அரியவகை தென்னாப்பிரிக்க முதலை! - வடநெம்மேலி பண்ணையில் ஆச்சர்யம்
அழகழகாய் 7 குஞ்சுகளை ஈன்ற அரியவகை தென்னாப்பிரிக்க முதலை! - வடநெம்மேலி பண்ணையில் ஆச்சர்யம்

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் உள்ள தென்னாப்பிரிக்க அரிய வகை முதலை ஒன்று 7 குஞ்சுகளை ஈன்றுள்ளது. இந்த முதலைக் குஞ்சுகள் கண்ணாடி தொட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலியில் உள்ளது முதலைப் பண்ணைச் செயல்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து எனப் பல்வேறு நாட்டு இனங்களில் முதலைகள் அதிகம் உள்ளன. தென்னாப்பிரிக்க காடுகளில் நீர்நிலைகளில் உள்ள ‘டவார்க் கெய்ன்’ என்னும் 10 முதலைகள் இங்கு வரவழைக்கப்பட்டு, பார்வையாளர்கள் அதைக் கண்டுகளிக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ‘டவார்க் கெய்ன்’ இனத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க முதலை ஒன்று முட்டையிட்டு 7 குஞ்சுகள் பொரித்துள்ளன. முதலைப்பண்ணை ஊழியர்கள் இந்த முதலைக் குஞ்சுகளைக் கண்ணாடி தொட்டியில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். “முதலைக் குஞ்சுகள் ஒரு வயதைக் கடக்கும் வரை கண்ணாடி தொட்டியில் பராமரிக்கப்பட்டு வரும். இந்த முதலைக் குட்டிகளுக்கு உணவாகத் தினமும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதலைக் குட்டிகள் 3 வயதைக் கடந்த பிறகு, தண்ணீர் உள்ள குளத்துக்குள் விடப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தப்படும்” என முதலைப் பராமரிப்பு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.