Published:Updated:

தூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு!

தூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு!
தூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கோடை முகாம் நடைபெற்றது. ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பூங்காவில் உள்ள உயிரினங்கள் பற்றியும், அதன் உயிரியல்பை பற்றியும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இந்த முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 20018ல் அந்த பூங்கா தூதுவர்களுக்குக் குளிர்கால முகாம் தொடங்கப்பட்டது. பாலூட்டிகள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், சிறுபூச்சிகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கையேடுகள், உபகரணங்களும் பயிற்சியின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் வருடத்திற்கு பத்து முறை இலவசமாகப் பூங்காவிற்கு வரலாம். சுமார் 400 பள்ளி குழந்தைகள் பூங்கா தூதுவர்களாக இந்த ஆண்டு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.