Published:Updated:

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

ஆமை ஓடுகளில் பயணம் செய்ததாக இன்று சிலர் கதைக்கிறார்கள்; உண்மையிலேயே ஒரு ஆள் அமர்ந்து பயணிக்கும் அளவுக்குப் பெரிய ஆமை ஓடுகளெல்லாம் இருக்கின்றனவா? அதில் மனிதர்கள் பயணிக்க வாய்ப்புண்டா?

- லலிதா, திருப்பூர்

தெர்ல மிஸ்

“ஆமைகளில் நேரடியாக தமிழர்கள் ஏறிப் பயணம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், கடல் ஆமைகள் போகும் பாதையைக் கவனித்துத் தமிழர்கள் கடல் வாணிபம் செய்துள்ளார்கள். ஆமை செல்லும் வழியே நீரோட்டம் இருக்குமென்பதைப் புரிந்து பயணித்தார்கள். கெலாபேகோஸ் தீவுப்பகுதியில் அல்டெபரா என்றொரு நிலத்தாமை இருக்கிறது. அது மிக மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் ஆதிவாசிகள் அதன்மீது அமர்ந்து பயணித்தது போன்ற படங்கள் உள்ளன. ஆனால் யாரும் கண்களால் பார்த்ததில்லை. மனிதர்கள் அமரும் அளவுக்கு அகலமான முதுகுடையது. அவையும் எண்ணிக்கையில் மிகக் குறைந்துவிட்டதால் காப்பிடங் களிலேயே தற்போது காணப்படுகின்றன. வெளியே எங்கும் பார்க்கமுடிவதில்லை. லெதர் பேக்(Leather Back sea turtle) என்ற வகைக் கடலாமைதான் இருப்பதிலேயே பெரியது. சுமார் 300 கிலோ எடைவரை வளரக்கூடியது. ஆள் அமரும் அளவுக்கு மிகப் பெரியதுதான். அதுவும் அந்தமான் தீவுகளில்தான் பார்க்கமுடியும். தமிழகக் கடலோரங்களில் எங்கும் அவற்றைக் காணமுடியாது. ஆமைகளின் ஓடு மிகவும் உறுதியானதுதான். அவற்றைப் பிடித்துக்கொண்டு நீரோட்டப் பாதையில் அதோடு பயணிக்கலாமே தவிர அதில் ஏறிக்கொண்டு யாரும் பயணிக்க முடியாது.”

தெர்ல மிஸ்

-​ ​முனைவர் பத்மநாபன், உயிரியல் ஆராய்ச்சியாளர் கடல் ஊர்வன உயிரினங்கள் பிரிவு, இந்தியக் கடல் உயிரியல் ஆராய்ச்சி மையம்.

தெர்ல மிஸ்

இந்தப் புயலுக்கெல்லாம் யார், என்ன அடிப்படைல பாஸ் பேர் வைக்கிறாங்க?

- செந்தில்வேல் கிருஷ்ணசாமி, மான்செஸ்டர்


சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல் களுக்குப் பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு கூட்டமைப்பிலும், நாடுகள் ஒன்றிணைந்து புயல் களுக்குப் பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல் களுக்கு இந்தியக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

தெர்ல மிஸ்

இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை ஒவ்வொரு நாடும் தலா எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கிறது. அதன்படி, எட்டு நாடுகள் மொத்தமாக 64 பெயர்களைக் கொடுத்திருக் கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள பெயர் வரிசைப்படிதான் ஒவ்வொரு பெயரும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

- பாலச்சந்திரன், இயக்குநர், வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை.

தெர்ல மிஸ்

என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. இது ஓராண்டு கழித்துத் தேவைப் படும், நான் எதில் முதலீடு செய்வது நல்லது? 

- சிவன், கோயம்புத்தூர்

தெர்ல மிஸ்

உங்களின் முதலீட்டுக் காலம் குறைவாக இருப்பதால், மூலதனத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. எனவே, ஃபிக்ஸட் டெபாசிட் போடுவது நல்லது. இதற்கு சுமார் 7.5 சதவிகிதம் வட்டி வருமானம் கிடைக்கும்.

- சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர் 

வாசகர்களே, தெர்ல மிஸ் பகுதிக்கு உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!