Published:Updated:

பிளாஸ்டிக்குக்கு மாற்றாகத் துணிப்பை - விழிப்புஉணர்வுப் பணியில் கோவைச் சிறுவர்கள்

பிளாஸ்டிக்குக்கு மாற்றாகத் துணிப்பை - விழிப்புஉணர்வுப் பணியில் கோவைச் சிறுவர்கள்
பிளாஸ்டிக்குக்கு மாற்றாகத் துணிப்பை - விழிப்புஉணர்வுப் பணியில் கோவைச் சிறுவர்கள்

கோவையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதுகுறித்து, பள்ளிச் சிறுவர்கள் விழிப்புஉணர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நேற்று (ஜன 1) முதல் பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள்குறித்து விழிப்புஉணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வீடு வீடாகச் சென்று சேகரித்துவருகின்றனர்.

மேலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புஉணர்வுப் பணிகளில் இறங்கியுள்ளன. அதன்படி, கோவையில் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு இயக்கம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பள்ளிச் சிறுவர், சிறுமிகள் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பது, சாலைகளிலும் வீடுகளிலும் இலவசமாக துணிப்பைகள் வழங்குவது, பிளாஸ்டிக் பொருள்களின் பாதிப்பைச் சொல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.