Published:Updated:

`ஈரத்தன்மையை 10 மணி நேரம் தாங்கும்!’ - செய்தித்தாளில் பாலீத்தின் பைக்கு மாற்று கண்டுபிடித்த கன்னியாகுமரி விவசாயி

`ஈரத்தன்மையை 10 மணி நேரம் தாங்கும்!’ - செய்தித்தாளில் பாலீத்தின் பைக்கு மாற்று கண்டுபிடித்த கன்னியாகுமரி விவசாயி
`ஈரத்தன்மையை 10 மணி நேரம் தாங்கும்!’ - செய்தித்தாளில் பாலீத்தின் பைக்கு மாற்று கண்டுபிடித்த கன்னியாகுமரி விவசாயி

செய்தித்தாள், மரவள்ளிக் கிழங்குமாவு, மஞ்சள் பொடி போன்ற இயற்கைக் கலவையைப் பயன்படுத்தி, கேரிபேக் உருவாக்கி அசத்தியிருக்கிறார், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பர் விவசாயி பாபு. பாலித்தீன் பை-க்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட இந்த பை-க்கான காப்புரிமை கேட்டு அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக, வியாபாரிகள் எளிதாகப் பயன்படுத்திவந்த பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால், கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் விவசாயி பாபு, செய்தித்தாள், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பாலித்தீன் பை-க்கு மாற்றாகப் பை தயாரித்துள்ளார்.

இந்தப் பை, ஈரத்தன்மையை 10 மணி நேரம் வரை தாங்கும் தன்மைகொண்டது. சாதாரணமாக மீன் மற்றும் இறைச்சிகளின் ஈரத்தன்மையை இந்தப் பை தாங்கும். எனவே, இந்த இளைஞரின் தயாரிப்பு, இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சோதனை முயற்சியாக மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை பகுதிகளில் பொதுமக்களுக்கு அளித்து வருகிறார். இதுகுறித்து பாபு கூறுகையில், "எளிதில் மட்கும் செய்தித்தாள், மக்குவதுடன் மண்ணுக்கு உரமாக மாறும் மரவள்ளிக்கிழங்கு பேஸ்ட், மஞ்சள் பொடி ஆகியவற்றைக் கலந்து பை தயாரித்துள்ளேன்.

ஒரு பை 50 பைசா முதல் ஒரு ரூபாய்க்குள்  வழங்க முடியும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத இந்த பைக்கான காப்புரிமை கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளேன். இதற்கு முன்பு மரவள்ளிக்கிழங்கை மூலப்பொருளாகக் கொண்டு ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா தயாரித்துள்ளேன்" என்றார்.