Published:Updated:

‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு

‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு
‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 380 டன் கொண்ட பெருமாள் சிலையைக் கொண்டுசெல்லும்போது தடையாக இருந்ததாகக் கூறி, மிகவும் பழைமையான நான்கு மரங்கள் மற்றும் சில மரங்களின் கிளைகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், அதே இடங்களில் மற்றும் கிரிவலப்பாதையின் மற்ற இடங்களிலும் நீர்த்துளிகள் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக 60 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.

‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ளது தனியாருக்குச் சொந்தமான கோதண்ட ராமசாமி கோயில். அங்கு பிரமாண்டமான வடிவத்தில் பெருமாள் சிலை வைக்க முடிவுசெய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில், ஒரே கல்லில் ஆன பாறையைத் தேர்ந்தெடுத்து 24 அடி அகலமும், 64 அடி நீட்டமும், 380 டன் எடையில்  வெட்டியெடுக்கப்பட்டது.  அதில், பெருமாளின் முகத்தை மட்டுமே வடிவமைத்துவிட்டு, மற்ற பணிகளை  பெங்களூருக்கே எடுத்துச்சென்று செய்துமுடிக்க கோயில் நிர்வாகம் முடிவுசெய்து, அந்தச் சிலையை 240 டயர் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வந்தது. திருவண்ணாமலை நகரில் நுழைந்து, கிரிவலப்பாதை வழியாக செங்கம் சென்றது. அந்தச் சிலை கிரிவலப்பாதையில் சென்றபோது, பழைமையான புளியமரங்கள் வெட்டப்பட்டன. இதனால், திருவண்ணாமலையில் இருக்கும் சூழலியல் ஆர்வலர்கள் கொந்தளித்துப்போனார்கள். மரங்களை வெட்டியது தொடர்பாகப் பல கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், மரங்கள் வெட்டிய இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுள்ளனர் 'நீர்த் துளிகள் இயக்கம்' என்ற தன்னார்வ இளைஞர்கள் அமைப்பு.

‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு

இதுகுறித்து நீர்த் துளிகள் இயக்கைத்தைச் சேர்ந்த ராகவன், " கிரிவலப்பாதை சாலையை விரிவாக்கம் செய்வதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.65 கோடி செலவில் திட்டம் அறிவித்தார். இதையடுத்து, 2016-ம் ஆண்டே நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதையை அகலப்படுத்துவதற்காக நேரில் ஆய்வுசெய்தது. அதன் முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வெட்டிச் சாய்த்தனர். இந்த விரிவாக்கம், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது. மரங்களை வெட்டக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், திருவண்ணாமலை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு, தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து மரம் வெட்ட தடைவிதித்தது. பலகட்ட விசாரணைக்குப் பின்பு, மரங்களை வெட்டாமல் பாதையை விரிவாக்கம் செய்யலாம் என்று கூறியது. அதன்பிறகு, மரங்களை வெட்டாமல் பாதை விரிவாக்கம் செய்யப்பட்டது. வெட்டிய பல மரங்களுக்குப் பதிலாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

‘சிலைக்காக சாய்க்கப்பட்ட மரங்கள்!’ - புதிய கன்றுகளை நட்ட 'நீர்த் துளிகள்' அமைப்பு

இந்த நிலையில்தான், பெருமாள் சிலை திருவண்ணாமலை நகருக்குள் வந்து கிரிலப்பாதை வழியாகச் சென்றது. கிரிவலப்பாதையில் செல்லும்போது, இரவுநேரம் என்பதால், அங்கு மரம் வெட்டியது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. 1 மணி நேரத்திற்குள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். ஒரு சிலைக்காக பல ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்டியது கண்டனத்துக்குரியது.  மரங்களை வெட்டியது வேதனையாகவும் உள்ளது. ''மரங்களை வெட்டப்போகிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால், வெட்ட விடாமல் தடுத்திருப்போம்'' என்றவர், 'நடந்து முடிந்ததை மாற்ற முடியாது. ஆனால், புதிதாக உருவாக்க முடியும்' என்பதை மனதில் வைத்தே மரங்கள் வெட்டிய இடத்திலும், கிரிவலப்பாதையின் பல இடங்களிலும் 60 மரக்கன்றுகள் வைத்து, அதற்குப் பாதுகாப்பு வளையமும் வைத்துள்ளோம். இதேபோன்று, இதற்கு முன்பும் 500 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்துள்ளோம். மலையைச் சுற்றி பல ஆயிரம் விதைப்பந்துகளைத் தூவியுள்ளோம்” என்றார்.