Published:Updated:

அமைச்சரால் காலதாமதமான யானைகள் புத்துணர்வு முகாம் - நீலகிரியில் இன்று தொடக்கம்!

அமைச்சரால் காலதாமதமான யானைகள் புத்துணர்வு முகாம் - நீலகிரியில் இன்று தொடக்கம்!
அமைச்சரால் காலதாமதமான யானைகள் புத்துணர்வு முகாம் - நீலகிரியில் இன்று தொடக்கம்!

வனத்துறை அமைச்சர் துவக்கிவைக்க வேண்டும் என காத்திருந்த தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம், பல்வேறு காலதாமதங்களுக்குப் பிறகு இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில், வனத்துறை பராமரிப்பில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில், கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதாேறும் டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாத துவக்கத்திலிருந்து 48 நாள்கள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாமை, கடந்த 18-ம் தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது. ஆனால், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாராளுமன்றத் தேர்தல், கட்சிக் கூட்டணி உள்ளிட்ட வேலைகளில் பிசி ஆகிவிட்டதால் குறித்த தேதியில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாமை இன்று முதன்மை தலைமை வனக்காப்பாளர் மல்லேசப்பா தொடங்கி வைத்தார். இதில் முதுமலை புலிகள் காப்பக துணை  இயக்குநர் சென்பகபிரியா, டேன்டி இயக்குநர், முதுமலை புலிகள் காப்பக வனவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும் 48 நாள்களுக்கு வனப்பகுதியில் பசுந்தீவனங்கள் வெட்டப்படாது. இதனால் காட்டுக்கும் ரெஸ்ட் யானைகளுக்கும் ரெஸ்ட் கிடைக்கும். அதேபோல புத்துணர்வு முகாம் நடைபெறும் 48 நாள்களுக்கும் ஒரு யானைக்கு 150 கிலோ  பசுந்தீவனம் என்ற அளவில் தீவனம் வழங்கப்படும். மேலும் பச்சைப்பயிறு, தாது உப்பு, தேங்காய் உட்பட வழக்கமான அரிசி, ராகி உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படும், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படமாட்டாது. புத்துணர்வு முகாமில் யானைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கும்.  

தற்பாேது முகாமில் உள்ள 24 யானைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகள், பயிற்சிகள், சத்தான உணவுகள், ஊட்டச்சத்து மற்றும் முழு ஓய்வு அளிக்கப்படும். முகாம் நடக்கும் 48 நாள்களும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன சவாரிகள் தாெடரும். அமைச்சர் அலுவலகத்தில் இருந்து குறித்துக் காெடுக்கும் தேதியில் புத்துணர்வு முகாம் துவங்கலாம் என்று காத்திருந்த முதுமலை புலிகள் காப்பகத்தினர், தேர்தல் பிசியில் அவர் உள்ளதை தெரிந்துகொண்டு, மேலும் காலம் தாழ்த்தாமல் புத்துணர்வு  தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.