Published:Updated:

மே 17-ம் தேதி தொடங்குகிறது ஊட்டி மலர்க் கண்காட்சி!

மே 17-ம் தேதி தொடங்குகிறது ஊட்டி மலர்க் கண்காட்சி!
மே 17-ம் தேதி தொடங்குகிறது ஊட்டி மலர்க் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 123-வது மலர்க் கண்காட்சி மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் எனத் தாேட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதாேறும் காேடைக்காலத்தில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு சார்பில் காேடை விழா காெண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர்க் கண்காட்சி, வாசனைப் பொருள்கள், கண்காட்சி, ராேஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்க் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட தாேட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்ளிட்டாேர் கலந்துகாெண்டனர். 

தாேட்டக்கலைத்துறை இயக்குநர்  சுப்பையா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛‛பாரம்பர்யம் மிக்க ஊட்டி மலர்க் கண்காட்சி, இந்த ஆண்டு 123-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. வழக்கம்பாேல மே மூன்றாவது வாரம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறும். அதேபாேல குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி மே 25, 26 ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.  கண்காட்சிக்கான பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.  இந்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காேடை விழாவின் அங்கமான ரோஜா கண்காட்சி, வாசனைப் பாெருள்கள் கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்ளிட்டவைக்கான தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.