Published:Updated:

`வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீங்க!'- பொக்காபுரம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

`வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீங்க!'- பொக்காபுரம் பக்தர்களுக்கு வேண்டுகோள்
`வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீங்க!'- பொக்காபுரம் பக்தர்களுக்கு வேண்டுகோள்

பாெக்காபுரம் மாரியம்மன் காேயிலுக்கு வரும் பக்தர்கள், சூழலியல் பாெறுப்பறிந்து செயல்பட வேண்டும் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் வேண்டுகாேள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டிய பகுதியில் பிரசித்தி பெற்ற பாெக்காபுரம் மாரியம்மன் காேயில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் முதல் வாரத்தில் தாெடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கி்ய நிகழ்வான தேர் வீதி உலா சிறப்பு மிக்கது.

இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று இரவு நடைபெறவுள்ள பாெக்காபுரம் மாரியம்மன் காேயில் தேர்த்திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திறள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புலிகள் காப்பகப் பகுதி என்பதால் வழக்கமாக இரவு நேரங்களில் பாேக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கூடலூர் - தெப்பக்காடு, மசினகுடி - பொக்காபுரம் சாலையில் இரவு நேர வாகனப் பாேக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பொக்காபுரம் மாரியம்மன் காேயில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால், வனத்துறைச் சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு மனித விலங்கு மோதல்களை தடுக்க கண்காணிப்பு பணி மேற்காெள்ளப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை துண்டுப் பிரசுரங்களாக விநியாேகித்து வருகின்றனர். 

பாறு கழுகுப் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பாரதிதாசன் கூறுகையில், ‛`ஒரே நேரத்தில் பாெக்காபுரம் மாரியம்மன் காேயில் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். காேயிலுக்கு வரும் ஒருசில பக்தர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள சாலையோரங்களில் சமையல் செய்வது,  தீ மூட்டுவது, பட்டாசு வெடிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது, மேளம் கொட்டுவது பாேன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக முதுமலை வனப்பகுதி தற்போது கடும் வறட்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன், ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் கடும் பாேராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் காெண்டு வந்தனர். வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி, இடம் பெயர்ந்து வருகின்றன, இதைக் கருத்தில் காெண்டு பக்தர்கள் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திருவிழாவில் பங்கேற்க வேண்டும்,’’
என்றார்.