Published:Updated:

குமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!

குமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!
குமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!

குமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!

ன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வரும் 29-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, அழிக்கால், குளச்சல், கடியபட்டணம் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. வள்ளவிளையில் கடல் சீற்றம் காரணமாகக் கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. வள்ளவிளை கடற்கரை சாலைகள் கடல் தண்ணீர் புகுந்ததால் சேதமடைந்தன.

கடந்த ஆண்டு கடல் சீற்றத்தில் இடிந்த நிலையில் காணப்பட்ட வீடுகள் மேலும் சேதமடைந்தன. வள்ளவிளைப் பகுதியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் நேற்றும் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கொல்லங்கோடு பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாகக் கடற்கரை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு