Published:Updated:

கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ

கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ
கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ

ரஷ்யாவின் டாம்போவ் என்ற நகரத்தில் உள்ளது டாம்போவ்கா கிராமம். கடந்த மாதம் 28-ம் தேதி மாலை ஐந்து மணியளவில் அந்த கிராமத்தில் உள்ள க்லிசின் நதிக்கு அருகில் இருக்கும் வயல் வெளிகளில் பெரும் தீ பற்றி எரிந்தது.

கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ

அறுவடைக்குப் பிறகு காய்ந்துக் கிடக்கும் வயல் வெளிகளில், அந்தக் கிராமத்தில் உள்ள யாரோ சிலர் தீயைப் பற்றவைத்துள்ளனர். பல ஏக்கர்கள் கொண்ட அந்த வயல் பகுதி முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. வெறும் ஒன்றரை மணி நேரத்தில் அந்த வயல் பகுதி முழுவதும் தீக்கிரையானது. அந்த நேரத்தில் தங்கள் சிசிடிவி கேமராவில் பதிவான சில காட்சிகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது உலக வன விலங்குகள் முகமை. 

கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ

அந்த வீடியோவில்,  வயல் பகுதிகளில் உள்ள மின் கோபுரங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்க்கும்போது கீழே வயலில் தீ மளமளவென எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால், கேமரா உள்ள அதே மின் கோபுரத்தில் ஸ்ட்ரோக் பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. கீழே எரியும் தீயிலிருந்து தன் முட்டைகளைப் பாதுகாக்க ஆண் பறவை போராடுகிறது. அந்தத் தீயின் வெப்பத்தினால் தன் குஞ்சுகளுக்குத் தீங்கு நேராத வகையில் அதன் மீது அமர்ந்து அடைகாக்கிறது. ஆண் பறவை பகல் முழுவதும் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும். இரவு நேரங்களில் தாய்ப் பறவை காவலுக்கு இருக்கும். இந்த வீடியோ முடியும்போது மறுநாள் வந்துவிடுகிறது. அன்று ஸ்ட்ரோக் குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. தீயின் வெப்பம் குஞ்சுகளையும், பெரிய பறவையையும் எதுவும் செய்யவில்லை. இரண்டும் ஆரோக்கியமாக உள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை!- வைரல் வீடியோ

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் அழிந்து வரும் பறவை இனங்களில் இந்த ஸ்ட்ரோக் பறவையும் ஒன்று. நீண்ட மூக்கைக் கொண்ட இந்தப் பறவை மீன்களையே உணவாக உண்ணும்.  `எல்லா வருடமும் ஏற்படும் காட்டுத் தீயின் தாக்கத்தினால் பல ஸ்ட்ரோக் பறவைகள் உயிரிழந்துள்ளன. ஆனால், தற்போது புதிதாக பிறந்துள்ள குஞ்சுகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவற்றின் பெற்றோர் தங்கள் கூட்டை வலிமையான இரும்புக் கம்பிகளில் மிகவும் உயரத்தில் கட்டியுள்ளது’ எனச் சுற்று சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பான், சீனா, கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த வகை பறவைகள் அதிகமாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vikatan