Published:Updated:

மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்

துரை.வேம்பையன்
மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்
மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்

நொய்யல் ஆற்றில் வரும் மழைநீரோடு நீராக, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சில சாயப்பட்டறைகள் வெளியேற்றும் சாயக்கழிவுகள் கலந்துவிடுவதாக, கரூர் மாவட்ட விவசாயிகள் வெடிக்கிறார்கள்.

மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்துவருவதால், அந்த மழைத் தண்ணீர் நொய்யல் ஆற்றில் வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் வந்தடைகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில், நொய்யல் ஆற்றில் வரும் நீரை நம்பி சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்துவருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீரும் இந்த ஆற்றிலிருந்துதான் எடுக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்துவருகின்றனர். 

மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கிவருகின்றன. அவர்கள், கடந்த 2 நாள்களாகப் பெய்த மழைநீர் நொய்யல் ஆற்றில் வருவதைப் பயன்படுத்தி, சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால், கரூர் மாவட்டம் நொய்யல் ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படடுள்ளனர். நேற்று காலை முதல் நொய்யல் ஆற்றில் பச்சை, கறுப்பு நிறத்தில் நுரையுடன் தண்ணீர் வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் சாயப்பட்டறைக் கழிவுநீர், சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் திறந்துவிட்டதால், கரூர் மாவட்ட நொய்யல் ஆற்றுபாசனம் பாதிக்கப்படுவதாகவும், காவிரியில் கலப்பதால் காவிரி நீரை குடிக்கும் பொதுமக்கள் நோய்வாய்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். `அரசு நடவடிக்கை எடுத்து, சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்
மறுபடியும் நொய்யலில் நுரைபொங்க சாயக்கழிவு! - விவசாயிகள் அச்சம்

இதுபற்றி, நம்மிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம்,``நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சுமார் 2 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டு குடிநீர் திட்டம் அங்குதான் செயல்பட்டுவருகிறது. இந்த நீரை பொதுமக்கள் குடித்துவருவதால், வயிற்றுபோக்கு, உடல் எரிச்சல், புற்றுநோய், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நீர், தற்போது காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரியிலிருந்து தென்மாவட்டம் முதல் வட மாவட்டமான சென்னை வரை கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், உடனடியாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால், இங்கிருந்து போகும் குடிநீரை யாரும் மக்கள் குடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். அவர்களுக்கு மாற்றுக் குடிநீர் வழங்க வேண்டும். இல்லை என்றால், போராட்டம் வெடிக்கும்'' என்றார் ஆக்ரோஷமாக.

Vikatan