Published:Updated:

சுற்றுச்சூழலைக் காக்க களமிறங்கும் இந்தியாவின் மிகப்பெரிய 16 பிராண்டுகள்!

ரேமண்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ட்ரெண்ட்ஸ், வெஸ்ட்சைட் உள்ளிட்ட பதினாறு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துக் கையொப்பமிட்டிருக்கின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற 2019-ம் ஆண்டின் லக்மே ஃபேஷன் வீக்கில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் ஃபேஷன் துறைக்கு நிலையான தீர்மானமான SU.RE (Sustainable Resolution) திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தை ஜவுளி அமைச்சகம், இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்தியாவின் ஃபேஷன் நிறுவனமான ஐ.எம்.ஜி ரிலையன்ஸ் போன்றவை இணைந்து உருவாக்கியுள்ளன.

இதில், ஃபேஷன் பொருள்கள் உற்பத்தியில், சுத்தமான சுற்றுச்சூழலுக்குப் பங்களிக்கும் வகையில் ஐந்து முக்கியக் குறிப்புகள் முன்வைக்கப்பட்டன. இந்த முயற்சிக்கு இந்தியாவின் முன்னணி ஃபேஷன் நிறுவனங்களான ஆதித்யா பிர்லா ஃபேஷன், அரவிந்த் ஃபேஷன்ஸ், ஃப்யூச்சர் க்ரூப், ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்க்ரே, லைஃப்ஸ்டைல், லீவைஸ், மேக்ஸ், ரேமண்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ட்ரெண்ட்ஸ், வெஸ்ட்சைட் உள்ளிட்ட பதினாறு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டிருக்கின்றன.

Smruthi Irani
Smruthi Irani

இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியின் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக உறுதிப்படுத்தியுள்ளன. இதுபற்றி ஸ்மிருதி, ``பெருமைமிக்க ஓர் இந்தியராக, வரலாற்றின் சாட்சியாக நான் இன்று இங்கு நிற்கிறேன். உலகம் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருங்கள் என்று கூறிய மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டில் நாம் இருக்கிறோம். இன்று நாம் எடுத்துக்கொண்ட தீர்மானம், மகாத்மா காந்தியடிகளுடைய சிந்தனையின் பிரதிபலிப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன், இந்தப் புவியைக் காப்பாற்ற இந்தியாவின் மிகப்பெரிய 16 பிராண்டுகள் ஒன்றிணைந்ததில்லை. தீர்மானத்துக்குக் கையொப்பமிட்ட 16 பேரின் மொத்த மதிப்பு 30,000 கோடி ரூபாய். இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை பொறுப்பான வணிகத்துக்கு மட்டுமல்ல, புத்திசாலித்தனமான வணிகத்துக்கும் உதவும்" என்று கூறினார்.

பேன்ட் ஸ்டைல் புடவை, பெப்லம் ஜாக்கெட், இண்டிகோ... இது இந்தியத் திருவிழா ஃபேஷன்!

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, கழிவுநீர் வெளியேற்றத்தை முறையாக நிர்வகிப்பது, சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற தீர்மானங்கள் அடங்கிய SU.RE திட்டம், ஐ.நா-வின் 2030-ம் ஆண்டை நோக்கிய நிலையான முன்னேற்றத்தின் இலக்கை அடைவதற்குப் பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு