Published:Updated:

பட்டினி, சோர்வு, பலவீனம்! - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

சத்யா கோபாலன்
பட்டினி, சோர்வு, பலவீனம்! -  100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி
பட்டினி, சோர்வு, பலவீனம்! - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

காலநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதல் ஆகியவற்றைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து பேசிக்கொண்டே உள்ளனர். ஆனால், அவற்றைச் சரிசெய்ய உலக நாடுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மை. 

பட்டினி, சோர்வு, பலவீனம்! -  100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

தங்களின் வாழ்க்கை மாறி, இருப்பிடம் மாறி, உணவு முறை மாறி என அனைத்தும் மாறிப்போய் அழிவின் விளிம்பில் பல உயிரினங்கள், விலங்குகள் இன்னும் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை, தங்களின் இறுதிக்காலத்தை மிகவும் கொடுமையாகக் கடந்துவருகின்றன. அதில், பனிக் கரடிகள் மட்டும் விதிவிலக்கல்ல.  

நேற்று முன்தினம், ரஷ்யாவின் வடக்கு சைபீரியாவில் உள்ள நோரில்ஸ்க் ( Norilsk ) நகர மக்கள், ஒரு அரிய வகை உயிரினத்தைப் பார்த்து அதன் பின்னால் படையெடுத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அது, பார்ப்பதற்கு மிகவும் அரிதாக இருந்தாலும் அதன் தோற்றம் மனத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளது. ஆர்டிக் பகுதிகளில் வாழ்ந்து பழகிய பனிக் கரடிகள், 100 கிலோ மீட்டர்கள் கடந்து உணவு தேடி ரஷ்யாவின் தொழில் நகரத்துக்குள்  நுழைந்துள்ளன.  

பட்டினி, சோர்வு, பலவீனம்! -  100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

PC : instagram/ putoranatour

உடல் மெலிந்த நிலையிலும் பசியால் வாடிய நிலையிலும் இருந்த அந்தப் பெண் கரடி,  நோரில்ஸ்க் நகரத்தின் வெளிப்பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்துள்ளது. உணவு தேடி அலைந்துகொண்டும் குப்பைகளை மோப்பம் பிடித்தவாறும் இருந்துள்ளது. கால்களில் சேற்றுடன் காணப்பட்ட அந்தப் பனிக் கரடி குப்பைமேட்டில் கிடக்கும் புகைப்படம், இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

இதுபற்றி பேசிய வன விலங்கு நிபுணர் ஒலெக் க்ராஷெவ்ஸ்கி (Oleg Krashevsky), பனிக் கரடி எதனால் நகரத்துக்குள் வந்தது எனத் தெரியவில்லை. தன் வழியைத் தொலைத்து, பாதை மாறி அது நகரத்துக்குள் வந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். நான் அந்தக் கரடியைக் பார்த்தேன். அதன் கண்களில் முற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. அதனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. 

பட்டினி, சோர்வு, பலவீனம்! -  100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

PC : instagram/ putoranatour

காலநிலை மாற்றம் பனிக் கரடிகளின் வாழ்விடங்களைச் சேதப்படுத்துகிறது. அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாப்பு மற்றும் உணவு இல்லாததால், அவை மக்களின் வாழ்விடங்களை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு ரஷ்யாவில் உள்ள வீடுகளில், பல பனிக் கரடிகள் உணவு தேடி உள்ளே நுழைந்துள்ளன. அதனால், அந்தப் பகுதியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. 

பட்டினி, சோர்வு, பலவீனம்! -  100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி

PC : instagram/ putoranatour

நோரில்ஸ்க் நகரத்துக்குள் நுழைந்துள்ள பனிக் கரடி, மிகவும் வலிமையற்ற நிலையில் உள்ளது. அதை மீண்டும் அதன் வாழ்விடத்துக்குக் கொண்டுசென்றால், அது எப்படி வாழும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று பேசியுள்ளார். அந்த பனிக் கரடி தொடர்ந்து நோரில்ஸ்க் நகரத்திலேயே சுற்றிவருகிறது. அதை மக்கள் துன்புறுத்தாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, பனிக் கரடிகள் மீண்டும் ரஷ்ய நகருக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan