Published:Updated:

``மரம் வளர்ப்பை ஊக்குவிக்க விதை பென்சில்!” - கரூரில் அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சி

இயற்கையை வேண்டியமட்டும் சிதைத்துவிட்ட நமது சுயநலத்தால், நாம் இப்போது புயல், வறட்சி என்று இயற்கையிடம் தொடர்ச்சியாக வாங்கி கட்டிக்கொள்கிறோம். இதனால், இயற்கையை மறுபடியும் கட்டமைக்கும் கட்டத்தில் இருக்கிறோம். இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கரூர் அரசுப்பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களுக்கு விதை பென்சில் வழங்கப்பட்ட நிகழ்வு பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

``மரம் வளர்ப்பை ஊக்குவிக்க விதை பென்சில்!” - கரூரில் அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கல்வி கற்பிக்கும் முறையில் மட்டுமன்றி, சூழல், இயற்கை விவசாயம், டெக்னிக்கல் விஷயங்கள், மாணவிகள் பயன்படுத்த நாப்கின் எரியூட்டி இயந்திரம் என்று எல்லாவகையிலும் இந்தப் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் 185 மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, விதை பென்சில்கள் வழங்கப்பட்டன. குளித்தலை வட்டாரக் கல்வி அலுவலர் அசோகன் இந்த விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விதை பென்சில்களை வழங்கியதோடு, பென்சிலுக்குப் பின்புறம் இருந்த விதைகளை எடுத்து, தானே நட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

``மரம் வளர்ப்பை ஊக்குவிக்க விதை பென்சில்!” - கரூரில் அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சி

"எங்கள் பள்ளி எல்லாவகையிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. இதுவரை, 15 லட்சம் வரை வெளியில் ஸ்பான்ஸர்கள் மூலம் நிதிபெற்று, இந்த அரசுப் பள்ளியில் எல்லாவசதிகளையும் செய்திருக்கிறோம். இதற்காக, ஐ.எஸ்.ஓ தரச்சான்றுகூட பெற்றுள்ளோம். 'சர்வீஸ் டு சொசைட்டி' என்ற அமைப்பு எங்க மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, எல்லா மாணவர்களுக்கும் விதை பென்சில்களை வழங்கி இருக்காங்க. இந்த அமைப்போட ஒருங்கிணைப்பாளர் துபாயில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் ரவி சொக்கலிங்கம் என்பவர். அவரோடு, சிவகாசியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான பசுமை நாகராஜனும் இணைந்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்துறாங்க. கடந்த நான்கு வருஷமா இதைச் செய்றாங்க. வருஷத்துக்கு 10,000 விதை பென்சில்களை உருவாக்கி, அதை தமிழக அளவில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மரம் வளர்ப்பு பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்துறாங்க. பென்சிலுக்குப் பின்புறம் குமிழ் மாதிரி வைத்து, அதன் உள்ளே கத்திரி, கீரை, தக்காளி விதைகளை வச்சு மூடிவிடுறாங்க. 

``மரம் வளர்ப்பை ஊக்குவிக்க விதை பென்சில்!” - கரூரில் அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சி

ஒரு பென்சில் செய்ய ஆறரை ரூபாய் செலவாகுமாம். அதுல நாலு ரூபாயை ரவியும் ரெண்டரை ரூபாயை பசுமை நாகராஜனும் ஏத்துக்குறாங்க. இந்த விதை பென்சில்களைக் கொடுப்பதின் நோக்கம், புதுமையான முறையில் விதைகளைக் கொடுத்தால், அதை கண்டிப்பாக மாணவர்கள் விதைத்து, வளர்ப்பார்கள் என்பதுதான். அதோடு, மாணவர்கள்

``மரம் வளர்ப்பை ஊக்குவிக்க விதை பென்சில்!” - கரூரில் அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சி

அந்த விதைகளை விதைத்தவுடன், பென்சில் தேயத் தேய அவர்கள் விதைத்த விதைகளும் வளர்ந்துகொண்டே இருக்கும். அதேபோல், 'மாணவர்களும் மரங்களும் நல்லா வளர்ந்தா, நாடு நன்றாக இருக்கும்' என்பதுதான் ரவி, நாகராஜனின் இந்த முயற்சியின் நோக்கம். இந்த வருடம் அவர்கள் எங்கள் பள்ளியையும் தேர்ந்தெடுத்ததில், எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஏற்கெனவே, எங்க மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகம், கிராம காலியிடங்களில் மரங்களை வளர்த்து வருகிறோம். அதோடு, மாடித்தோட்டம், பள்ளி வளாகக் காலி இடங்களில் இயற்கைத்தோட்டம் என்று இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்கிறோம். இந்நிலையில், இப்படி விதை பென்சில் என்கிற புதுமையான முறையில் விதைகளைக் கொடுப்பதன் மூலம், எங்க மாணவர்களின் இயற்கையைக் காக்கும் ஆர்வம் இன்னும் கூடியிருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு