Published:Updated:

``நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம்!” – பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் மனு

``நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம்!” – பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் மனு
``நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம்!” – பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் மனு

தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ கிராமம் என அழைக்கப்படும் பொட்டிபுரம் கிராமத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் ஊர் மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

``நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம்!” – பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் மனு

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பொட்டிபுரம் என்ற கிராமம். அங்கு அமைந்துள்ள மலையில், மத்திய அரசு நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்யும் மையம் ஒன்றை அமைக்க ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிட்டது. இதற்கு அக்கிராம மக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆய்வு மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

``நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம்!” – பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் மனு

இவை எல்லாம் ஒருபுறம் என்றால், நேற்று பொட்டிபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில், சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் கலந்துகொண்டார். அப்போது, பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராம மக்கள் சார்பாக, நியூட்ரினோ ஆய்வு மையத்தை பொட்டிபுரம் மலையில் செயல்படுத்தக் கூடாது எனவும், நிரந்தரமாக அத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரி மனு அளிக்கப்பட்டது.

Vikatan