Published:Updated:

200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் விழுந்ததால் வெளியேறிய வௌவால்கள்; கிராம மக்கள் சோகம்!

மழையில் சாய்ந்த ஆலமரம்

வௌவால்களின் கூடாரமாக திகழ்ந்து வந்த ஆலமரம், அண்மையில் பெய்த மழையில் வேரோடு சாய்ந்துள்ளது.

200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் விழுந்ததால் வெளியேறிய வௌவால்கள்; கிராம மக்கள் சோகம்!

வௌவால்களின் கூடாரமாக திகழ்ந்து வந்த ஆலமரம், அண்மையில் பெய்த மழையில் வேரோடு சாய்ந்துள்ளது.

Published:Updated:
மழையில் சாய்ந்த ஆலமரம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே உள்ளது கழுபெரும்பாக்கம் கிராமம். இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் இருந்துள்ளது. இந்த ஆலமத்தில், நூற்றுக்கணக்கான வௌவால்கள் வசித்து வந்துள்ளன. எண்ணற்ற வௌவ்வால்கள் அந்த மரத்தில் தங்குவதை கண்ட அப்பகுதி மக்கள், வௌவால்களுக்கு இடையூறுகள் இல்லாதபடி வழிவழியாக பல்வேறு கட்டுப்பாடுகளை கிராமத்தில் கடைப்பிடித்து வந்துள்ளனர். அதற்காக, இந்த கிராமத்தில் தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிப்பதோ, சத்தமாக ஒலிப்பெருக்கி வைப்பதோ, சுக - துக்க நிகழ்ச்சிகளின்போது மேள தாளங்கள் வைப்பதோ இல்லையாம். வௌவால்களை பேணிப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

வவ்வால்
வவ்வால்

இந்நிலையில், கடந்த மே 15-ம் தேதி இரவு அந்த பகுதியில் பொழிந்த கனமழையில்... இந்த தொன்மையான ஆலமரம் வேரோடு சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் அங்கிருந்த வௌவால்கள், பதறி பறந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளன. வௌவால்களின் புகலிடமாக பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான ஆலமரம், மழையில் வேரோடு சாய்ந்ததை கண்டு சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள், ஊராட்சி மன்றத்துடன் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism