Election bannerElection banner
Published:Updated:

275 வீடுகள்... தினமும் 1.5 லட்சம் லி. தண்ணீர் சுத்திகரிப்பு: அசத்தும் அப்பார்ட்மென்ட்!

recycling water
recycling water

மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பணிக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் உள்ள 'பிளாசா பிரிஸ்டைன் ஏக்கர்ஸ்' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 275 வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் இந்தக் குடியிருப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தோட்ட பராமரிப்பிற்கும், கழிப்பறை மற்றும் பிற சுத்தம் செய்யும் பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி அடுக்குமாடிக் குடியிருப்பின் தலைவர் பழனி குமரேசனிடம் பேசினோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lTJ2I8

"தண்ணீர்த்தேவையைச் சமாளிப்பதற்காகத் தான், மறுசுழற்சி செய்யும் முடிவுக்கே வந்தோம். சுத்திகரிப்பு பற்றிய தகவல்களைத் தேடினோம். நீர் மேலாண்மை நிபுணர்களிடம் பேசினோம். எஸ்.டி.பி (Sewage Treatment Plants), போர் என அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். 2017-ம் ஆண்டு எஸ்.டி.பி திட்டத்தைத் தொடங்கினோம். முறையாகச் செயல்பாட்டுக்கு வர ஒரு வருடம் ஆனது. இப்போது தினமும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. குடியிருப்பவர்களின் பார்வைக்காகச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, பாட்டிலில் அடைத்துத் தினமும் மூன்றுமுறை கண்ணாடிப்பெட்டியில் வைத்துக் காட்சிப்படுத்துகிறோம்.

recycling water
recycling water

மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பணிக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இந்தக் குடியிருப்பைச் சுற்றிலும் இருக்கும் மரங்கள், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள் இவ்வளவு பசுமையாக இருக்க இந்தத் தண்ணீர்தான் காரணம். தினமும் சுழற்சியாக நடைபெற்று வருவதால் தண்ணீர்த் தட்டுப்பாடு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இல்லை. 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குகிறோம். அதற்காகத் தனியாக எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இங்கு குடியிருப்பவர்களும் தண்ணீரைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். மழைநீரைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்" என்றார்.

கழிவுநீரைப் பிரித்து அனுப்பினால் கூடுதல் பலன்

recycling water
recycling water

பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குழு தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசன், "சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கழிவுநீரகற்றும் கால்வாய்கள் கிடையாது. அது மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமே உள்ளது. அதனால், குடியிருப்புகள்ல அமைக்கப்படும் இதுபோன்ற எஸ்.டி.பி முறை நல்ல பலன் கொடுக்குது. இந்த முறையில் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்க முடியுது. அதைத் திரும்பவும் பயன்படுத்தவும் முடியுது. சமையலறை, கழிப்பறை, குளியலறை கழிவுநீரைத் தனித்தனியாகப் பிரித்து அனுப்பி சுத்திகரித்தால் இதன் பலன் இன்னும் அதிகரிக்கும். கழிவுநீரும் முழுமையாகச் சுத்திகரிக்கப்படும்" என்றார்.

- இந்தக் குடியிருப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எஸ்.டி.பி முறை பற்றியும், இதற்கான செலவினம் உள்ளிட்ட விவரங்களுடன் குடியிருப்புவாசிகளின் கருத்துகளையும் அடங்கிய முழுமையான செய்திக் கட்டுரையை பசுமை விகடன் இதழில் வாசிக்க > மறுசுழற்சிப் பயன்பாட்டில் அசத்தும் குடியிருப்பு! https://www.vikatan.com/news/environment/this-residential-area-is-capitalizing-on-recycling

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு