Published:Updated:

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

ஜோம்பி வைரஸ் ஆய்வு
News
ஜோம்பி வைரஸ் ஆய்வு

இந்த `ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவ்வாறாகப் பனி உருகி வரும் நன்னீரில் பல வைரசுகள் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதுதான்!

Published:Updated:

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

இந்த `ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவ்வாறாகப் பனி உருகி வரும் நன்னீரில் பல வைரசுகள் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதுதான்!

ஜோம்பி வைரஸ் ஆய்வு
News
ஜோம்பி வைரஸ் ஆய்வு

`ஜோம்பி வைரஸ்கள்’ சில திரைப்படங்களால் இந்த பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.. இந்த `ஜோம்பி வைரஸ்கள்’ பற்றி சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் ஆனது..

சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 13 வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ Zombie Virus என்று விஞ்ஞானிகள் அழைகின்றனர்.

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக், அண்டார்டிகா பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆண்டுகளாக புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.

48,500 வருடங்களாக உறைநிலையில் இருந்த ஜோம்பி வைரஸ்களை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், இவை அமீஃபா என்ற ஒரு செல் உயிரியை இன்றும் தாக்கும் பண்பைக் கொண்டுள்ளன என்பது தெரியவந்தது.   

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, `இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு' என்றாலும் புவி வெப்பமடைதல் காரணமாக நிரந்தர உறைபனி உருகுதல் தீவிரமாகும்போது இம்மாதிரியான வைரஸ்களால் ஆபத்து ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோம்பி வைரஸ் ஆய்வு
ஜோம்பி வைரஸ் ஆய்வு

உண்மையில் இந்த ஜோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு பாராட்டத்தக்கதுதான். காரணம் ஒரு வைரஸ் சுமார் 100 நானோ மீட்டர் அளவில்தான் இருக்கும். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு!  இவ்வளவு மிக மிக நுண்ணிய உருவிலுள்ள வைரஸை உருகி வரும் தண்ணீரிலிருந்து பிரித்து எடுத்தது ஒரு மகத்தான சாதனைதான்.

இந்த கண்டுபிடிப்பின் மேல் மக்களின் கவனத்தை ஈர்க்க இதனை " ஜோம்பி வைரஸ்" எனப் பெயரிட்டு  நிறையக்  கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் ஜோம்பி வைரஸ் உண்மையில் மனிதர்களைத் தாக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

அனைத்து வைரஸ்களுக்கும் அதற்கென்று  ஒரு உருவம் உண்டு. அதே மாதிரி இவற்றுக்கு என்று  தனித்துவமான மரபணுவும் உண்டு.  வெறிநாய்க்கடி நோய்க்கு காரணமான ரேபிஸ் வைரஸ் புல்லட் வடிவத்தில் இருக்கும். பெரியம்மை வைரஸ் நீள்வட்ட வடிவில் இருக்கும். எபோலா நோய்த் தொற்று வைரஸ் புழுக்கள் போன்று நீண்டு காணப்படும்.

ஆனால் உண்மையில் வைரஸ்களுக்கு உயிர் இல்லை. வைரஸ்களின் உருவமும் அதன் மரபணுவும் சிதையாமல் இருக்குமானால் எத்தனை கோடி வருடங்களானாலும் அவை நோயினை உருவாக்கவல்லது! அதாவது இந்த வைரஸ் தாக்க வல்ல உயிரின் உடலுக்கு இவை வெற்றிகரமாகச் செல்லும் பட்சத்தில் இவை உயிர் பெற்றுவிடும். பின்னர் வீறுகொண்டு தாக்கி தங்கள் இனத்தைப் பல கோடி எண்ணிக்கையாகப் பெருக்கிக் கொள்ளும். ஆக, திறந்த வெளியில் வைரசுக்கு உயிர் இல்லை. ஆனால் இவை தாக்கவல்ல உயிரிக்குள் சென்றால் உயிர் பெற்றுவிடுகின்றன. 

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

துருவப் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டியின் வெப்ப நிலை சுமார்  மைனஸ் 88 டிகிரி ஆகும். அதாவது பூஜித்ததிற்குக் கீழ் 88 டிகிரியாக இருக்கும்! இந்த பனிக்கட்டியில் உள்ள இந்த மிகக்குறைந்த வெப்பநிலையில் வைரஸின் உருவமும் அதன் மரபணுவும் நன்கு பதப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக இருக்கும். துருவப் பிரதேசத்தில் உள்ள இந்த பனிக்கட்டிகள் நன்னீராலானது. பூமியில் உள்ள நன்னீரில் 90 சதவிகிதம் துருவ பிரதேசத்தில்தான் உள்ளது! இவை அனைத்தும் உருகினால் 230 அடி வரை கடல் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதாவது கடல்மட்டம்  சுமார் 25 மாடிக் கட்டிடத்தின் அளவிற்கு உயரவாய்ப்புள்ளது.

சரி... இந்த பனிக்கட்டிகளுக்குள் எப்படி வைரஸ் சென்றது?

வைரஸ் நோயினால் இறந்த விலங்குகளின் உடல், பனிக்கட்டியில் சிக்கிப்  புதைந்திருந்தால் அல்லது வைரஸ் அடங்கிய உயிரிகளின் எச்சங்கள் இங்குப் புதைந்திருந்தால், அதனுடன் இந்த வைரஸ்களும் பனிக்கட்டியில் புதையுண்டிருக்கும். பனிக்கட்டியில் வெப்பநிலை மிகவும் குறைவு என்பதால் இங்கு இவை நன்கு பாதுகாப்பாகப் பதப்படுத்தப்பட்டிருக்கும். பனி உருகினால் இந்த இறந்த உடலில் இருக்கும் வைரஸ்கள் வெளிவர ஆரம்பிக்கும்.

ஜோம்பி வைரஸ்
ஜோம்பி வைரஸ்

ஒரு நோயாளியின் உடலில் எவ்வளவு வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளன?

கொரோனா நோயாளி ஒருவரின் உடலில் சுமார் 100 கோடியிலிருந்து வைரஸ்கள் இருக்கும்! இவ்வளவு வைரஸ்ஸா என நினைக்க வேண்டாம். இவ்வளவு வைரஸையும் ஒரு தராசில் வைத்து எடை போட்டால் இவை ஒரு மில்லிகிராமில் பத்தில் ஒரு பங்காகத்தான் இருக்கும்!

கொரோனாவின் தாண்டவம் உச்சத்திலிருந்த நேரத்தில் மொத்த பூமிப் பந்தில் சுமார் 100 கிராமிலிருந்து 10 கிலோ வரை இந்த வைரஸ் இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்  பெரியம்மை நோயாளியின் உடலில் இதைவிட அதிக அளவில் வைரஸ் உருவாகும்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயு மற்றும் விலங்குகளின் சாணம் உள்ளிட்டவற்றிடமிருந்து வெளியேறும் மீத்தேன் போன்ற வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ளும் பண்புடையவை. இந்த வாயுக்கள் நம் வளிமண்டலத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால்  துருவ பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் படிப்படியாக உருகிய வண்ணம் உள்ளது.

உருகி வரும் இந்த நன்னீரில் வகைவகையாக எண்ணிலடங்காத வைரஸ்கள்  வர வாய்ப்புள்ளன. காரணம் நோயுற்று இறந்த நிறைய உயிரிகளின் உடல்கள் வைரஸ் உடன் இந்த பனிக்கட்டியில் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த ஜோம்பி வைரஸ் கண்டுபிடிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது  என்னவென்றால், இவ்வாறாகப் பனி உருகி வரும் நன்னீரில் பல வைரஸ்கள் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதுதான்!

இதனால் மனிதனுக்கு எதுவும் பாதிப்புண்டா?

சில தினங்களுக்கு முன் கண்டறிந்த இந்த வைரஸ்கள் ஒரு செல் உயிரிகளான அமீஃபாவைத்தான் தாக்கவல்லது. இவை மனிதனைத்  தாக்காது. ஒரு வைரஸை சாவியாக நினைத்துக் கொள்ளுங்கள். இவை தாக்கும் உயிரியின் உடலைப் பூட்டு என நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பூட்டுக்கும் தனித்தனி சாவி உண்டு இல்லையா? இது  வைரஸ்க்கும் அவை தாக்கும் உயிரினங்களுக்கும் பொருந்தும். அதாவது பெரும்பாலும் ஒரு உயிரியைத் தாக்கும் வைரஸ் வேறு ஒரு உயிரியைத் தாக்குவதில்லை.

மிகமிகச் சில வைரஸ்கள்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரினங்களைத் தாக்கும் வல்லமை படைத்தது‌. இதுதான் இயற்கை நமக்குத் தந்த முதல்கட்ட பாதுகாப்பு. அதனால் நாம் இந்த ஜோம்பி வைரஸைப் பற்றி அதிகமாகப் பயப்படத் தேவையில்லை..

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

மேலும் என்னதான் பனிக்கட்டியில் வைரஸ் பாதுகாப்பட்டிருதாலும் பனி உருகும் போது வைரஸ்கள் பாதிக்குமேல் சிதைவடைந்துவிடும். சிதைவடைந்த இந்த வைரஸ்களால் நோய் உண்டாக்க முடியாது.  மேலும் நோயுற்ற உடலில் உள்ள வைரஸ் உறைந்திருக்கும் பனி உருகி பின் இறுகிப் பனிப் பாறையாக உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறாகப் பனி உருகி மீண்டும் இறுகும் போது வைரஸின் உடல்கட்டமைப்பு பெருவாரியாக அழிக்கப்படுகிறது. எனவேதான்  48,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரஸ்கள் உயிரிழக்காமல் கண்டறியப்பட்டது, இன்று உலக செய்தியாக வலம் வருகிறது!இவ்வாறாகப் பனி உருகி இறுகுவதால் வைரஸ்கள் அழிவது இயற்கை நமக்குத் தந்த இரண்டாவது அரண் எனக் கொள்ளலாம்.

மேலும் இயற்கை நமக்கு மிக வலிமையான மூன்றாம் கட்ட பாதுகாப்பைத் தந்துள்ளது. உறைநிலையில் இருக்கும் இந்த வைரஸ்கள் நன்னீர் பனிக்கட்டி உருகும்போது வெளிவருகின்றன. பின்னர் இவை பெரும்பாலும் கடலுக்குள்தான் வந்து சேரும். கடல் நீர் உப்பு நிறைந்தது. இந்த கடல் நீரில் இவ்வகை வைரஸ்கள் அழிந்துவிடும் வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.

உப்புக் கரைசல் வைரஸ்களை மட்டும் அல்ல நிறைய நுண்கிருமிகளையும்  அழிக்கும் வல்லமை படைத்தது. சில நூறு வருடங்களுக்கு முன்  காலரா பரவலைத்தடுக்க உப்புக் கரைசலால் கைகழுவும் பழக்கம் இருந்துள்ளது. இன்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்று வீட்டுக்குள் நுழையும் முன் உப்புக் கரைசலில் கைகழுவும் பழக்கம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ளது!

கட்டுரையாளர்:  பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
கட்டுரையாளர்: பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

கடல் நீரில் நுண்கிருமிகளே இல்லை. எல்லாவற்றையும் கடல் நீரிலுள்ள உப்பு அழித்துவிட்டது என எண்ணவேண்டாம்.  ஊறுகாய் அதிகநாள் கெடாமல் இருப்பதற்கு அதில் இருக்கும் அதிகப்படியான உப்புதான் காரணம். அதேவேளையில் ஊறுகாயில் ஒரு துளி கடல் நீர் பட்டால் ஊறுகாய் கெட்டுவிட்டும். காரணம் கடல் நீரில் காலம் காலமாக வாழ்ந்து வரும் நுண்கிருமிகளை உப்புக்கரைசலால் அழிக்க முடியாது!

ஆனால் பனி உருகி வரும் நன்னீரிலிருக்கும் இந்த ஜோம்பி வைரஸ்கள் கடல் நீரில் அழிந்துவிடும் வாய்ப்பு மிக அதிகம்.  எனவே ஜோம்பி வைரஸ்களை நினைத்து அதிகம் பயப்படத்  தேவையில்லை.  பூமி வெப்பமாவதால் துருவ பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி  கடல் மட்டம் தொடர்ந்து படிப் படியாக உயர்ந்து வருகிறது. இந்த கடல் மட்ட உயர்வுதான் உலகநாடுகளை அதிக அளவில் அச்சுறுத்துகிறது.  கடல்விழுங்க இருக்கும் நகரங்களில் நம் சென்னை மாநகரமும் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.