Published:Updated:

பருவநிலை மாற்றத்தால் 65% பூச்சி இனங்கள் இறக்கும்... அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!

வண்ணத்துப் பூச்சி

38 வகையான பூச்சியினங்களில் 25 வகை பூச்சியினங்கள் அவற்றின் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒழுங்கற்ற, தீவிர வெப்பநிலை மாறுபாடுகளின் காரணமாக அடுத்த நூற்றாண்டில் அழிந்து போக நேரிடும் என கண்டறியப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் 65% பூச்சி இனங்கள் இறக்கும்... அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!

38 வகையான பூச்சியினங்களில் 25 வகை பூச்சியினங்கள் அவற்றின் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒழுங்கற்ற, தீவிர வெப்பநிலை மாறுபாடுகளின் காரணமாக அடுத்த நூற்றாண்டில் அழிந்து போக நேரிடும் என கண்டறியப்பட்டுள்ளது.

Published:Updated:
வண்ணத்துப் பூச்சி

உலகின் பல்வேறு பகுதிகளில்  அடிக்கடி ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றத்தின் விளைவாக புவியின் கடற்பரப்பு மற்றும் நிலப்பரப்புகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த மாறுதல்களுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது புவி வெப்பமயமாதல்.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல்
Pixabay

காலநிலை மாற்றம் பற்றி பேசும்போது புவி வெப்பமயமாதல் குறித்து நாம் நினைவுகூற வேண்டியிருக்கிறது. புவி வெப்பமயமாதலின் மூலம் மனிதர்களாகிய நாம் இதுவரை கவனத்தில் கொள்ளாத பல்வேறு  விளைவுகளும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ஆதரவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட  ஒரு ஆய்வு முடிவுகளின்படி, காலநிலை மாற்றத்தால் புவியில் உள்ள 65% பூச்சியினங்கள் அடுத்த நூற்றாண்டுக்குள் அழிந்து போக கூடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்(Nature Climate Change) இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வுக்கு, வெப்பநிலையின் ஏற்ற இறக்கங்கள் மூலம் ஏற்படும் காலநிலை-மத்தியஸ்த (Climate-Mediate) மாற்றங்கள் அழிவு அபாயத்தை ஊக்குவிக்கின்றன என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக காலநிலை-மத்தியஸ்த மாற்றங்கள் விலங்குகளின் எண்ணிக்கையை சீர்குலைத்து, அழிவு அபாயத்தை ஊக்குவிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி

வெப்பநிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களின் விளைவாக, ஆய்வு செய்யப்பட்ட 38 வகையான பூச்சியினங்களில் 65% பூச்சியினங்கள் அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலின் மூலம் அதிகம் பாதிக்கப்பட கூடியவை குளிர்ந்த ரத்தம் கொண்ட பூச்சியினங்கள். ஏனெனில் அவை வெளிப்புற வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்படும்போது அவை தங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை கொண்டிருக்கவில்லை.

உலகில் வாழும் உயிர்களை, வெப்ப ரத்த உயிர்கள், குளிர் ரத்த உயிரினங்கள் என இரண்டாக பிரிக்கலாம்.

வெப்ப ரத்தம் கொண்டவைகளுக்கு உடல் வெப்பநிலையானது, வெளிப்புற வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். அந்தவகையில்  மனிதர்களாகிய நாம் வியர்வையை வெளியேற்றி உடல் வெப்பச் சமநிலை செய்துகொள்கிறோம். பறவைகள் இறகுகள் மூலமாக உடல் வெப்பத்தை சமநிலை செய்கிறது.

 பட்டாம்பூச்சி, தட்டான் முதலிய பூச்சிகள் குளிர் ரத்தப் பிராணிகள் வகையைச் சார்ந்தது. குறிப்பாக பூச்சி இனங்கள் குளிர் ரத்த உயிரிகள்(Cold blooded animals); எனவே தங்கள் உடல் வெப்பநிலையை சமனில் கொள்ள,  வெளிப்புற வெப்பம் இன்றியமையாத தேவையாகின்றது. குளிர் ரத்தப் பிராணிகள், சூரியனின் வெப்பத்தில் காய்ந்து தம் உடல் வெப்ப நிலையை சமன் பெறுகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆய்வு முடிவுகள் குறித்து  நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் முதுகலை ஆராய்ச்சியாளரான டாக்டர்.கேட் டபி "வெப்பநிலை மாறுபாடுகள் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்து அறிய எங்களுக்கு ஒரு மாடலிங் கருவி தேவை. விஞ்ஞானிகள் இந்த இயக்கவியலை புரிந்து கொள்வதற்கான நேரடி மற்றும் துல்லியமான வழிகளை இந்த ஆய்வின் மூலம் வழங்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்" என்றார்.

Nasa research
Nasa research

டாக்டர்.கேட் டபி  மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், குளிர் ரத்தம் கொண்ட பூச்சிகளின் எண்ணிக்கை, அடுத்த நூற்றாண்டில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களுக்கு பின் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் ஆராய்ச்சிக் குழுவால் மதிப்பிடப்பட்ட 38 வகையான பூச்சியினங்களில் 25 வகை பூச்சியினங்கள் அவற்றின் உள்ளூர் சுற்றுசூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒழுங்கற்ற, தீவிர வெப்பநிலை  மாறுபாடுகளின் காரணமாக அடுத்த நூற்றாண்டில் அழிந்து போக நேரிடும் என கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் உயிரியல் பன்முகத்தன்மையை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.