Published:Updated:

`உலக மக்கள் தொகையில் 99% பேர் தரமில்லாத காற்றை சுவாசிக்கின்றனர்!' - எச்சரிக்கும் WHO

Air Pollution

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிய பிறகு, தடுக்க முடிந்திருக்கக் கூடிய 7 மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என உலக சுகாதார நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் தலைவர் டாக்டர் மரியா நீரா கூறியுள்ளார்.

`உலக மக்கள் தொகையில் 99% பேர் தரமில்லாத காற்றை சுவாசிக்கின்றனர்!' - எச்சரிக்கும் WHO

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிய பிறகு, தடுக்க முடிந்திருக்கக் கூடிய 7 மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என உலக சுகாதார நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் தலைவர் டாக்டர் மரியா நீரா கூறியுள்ளார்.

Published:Updated:
Air Pollution

தரமில்லாத காற்றைதான் உலகில் உள்ள அனைவரும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மூச்சுக்குழல், ரத்த ஓட்ட பிரச்னைகளை ஏற்படுத்தைக்கூடிய காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை அது வலியுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், கடந்த ஆறு மாதங்களாக காற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான தனது வழிகாட்டல்களை செயல்படுத்தியதற்குப் பின்னர், கடந்த திங்கள் அன்று, காற்றின் தர மேம்பாடு குறித்த தனது ஆய்வுத் தரவுகளை, உலகெங்கிலும் உள்ள பெருகிவரும் நகரங்கள், கிராமங்கள், 6,000-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வழங்கியுள்ளது.

Air Pollution
Air Pollution

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக அளவில் 99 சதவிகித மக்கள், காற்றின் தர அளவீடு என வரயறைக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக மாசுகள் கலந்துள்ள காற்றை சுவாசிக்கின்றனர் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றில் கலந்துள்ள மாசு துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி, நரம்புகள் மற்றும் தமனிகளுக்குள் நுழைந்து, நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும், கிழக்கு மத்தியதரைக் கடல், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காற்றின் தரம் மோசமாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிய பிறகு, தடுக்க முடிந்திருக்கக் கூடிய 7 மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என உலக சுகாதார நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் தலைவர் டாக்டர் மரியா நீரா கூறியுள்ளார். முதன்முறையாக, நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவீட்டு தரவுகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மனிதனால் உருவாக்கப்பட்ட எரிபொருளை எரிப்பதில் இருந்து உருவாகும் நைட்ரஜன் ஆக்சைடு, நகரப் பகுதிகளில் அதிகம் உருவாகுகிறது என்று அது தெரிவிக்கிறது.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

மாசுக்களை ஏற்படுத்தக்கூடிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும், இல்லையெனில் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் ஏற்படும் எனவும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இந்தியாவும் உலகமும் பெரிய மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் எனவும் மரிய நீரா தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism