Published:Updated:

யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத மின்வேலி; பரிதாபமாக உயிரிழந்த கரடி!

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடி
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடி

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வாழைத்தோட்டம் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி இளம் ஆண்‌ கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் கரடி ஒன்று இறந்துகிடப்பதாக இன்று காலை வனத்துறையினருக்குத் தகவல் வந்துள்ளது.இந்தத் தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அங்கு கரடி இறந்திருப்பதை உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு விளை நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுருந்த மின் வேலியில் சிக்கிய நிலையில் கரடி இறந்து கிடப்பதால் மின்சாரம் தாக்கியே இறந்திருக்கும் என்று உறுதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதுமலை
முதுமலை
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கிய புலி; உயிரிழந்த சோகம்!

கரடியின் இறப்பு குறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள்,``இது ஒரு இளம் ஆண் கரடி. வாழைத்தோட்டமான இந்தப் பகுதியைக் கடக்க முயன்ற போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. ராமசாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.உண்மை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஜனார்த்தனன், ``யானைகள் வழித்தடத்தில் எந்த ஆக்கிரமிப்பும்‌ இருக்கக் கூடாது என நீதிபதிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி மின் வேலிகளை அமைத்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடி
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடி
`தமிழகத்தில் இதுதான் முதல்முறை!' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு

இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் விளை நிலங்களில் அமைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி யானை, காட்டுப்பன்றி, மான், கரடி போன்ற வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.இங்குள்ள மின் வேலிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு