Published:Updated:

̀மஞ்சள் பையே வருக... வாழ்க!' - ஆனால், அந்த பழைய அத்தியாயங்கள்?

மீண்டும் மஞ்சப்பை
News
மீண்டும் மஞ்சப்பை

ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் அறிமுகமாகவே, மஞ்சள் பை என்று வழங்கப்பட்ட துணிப்பையானது வழக்கொழிய ஆரம்பித்துவிட்டது. கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக மஞ்சள் பை என்னவென்றே தெரியாது. துருவித் துருவிக் கேட்டால், லிங்குசாமி தயாரிப்பில் வெளியான `மஞ்சப்பை' என்கிற படத்தைத்தான் சொல்வார்கள்.

மீண்டும் `மஞ்சள் பை'யை இன்றைய தினம் அறிமுகப்படுத்தி, அடுத்த அத்தியாயத்தைத் துவக்கி வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதென்ன அடுத்த அத்தியாயம்? அதைப் பற்றி அடுத்துப் பேசுவோம். முதலில் மஞ்சள் பை விஷயத்துக்கு வருவோம்.

`மஞ்சள் பை' என்பது உண்மையில் துணிப்பை. அதைத் துணிப்பை என்றுதானே அழைக்கவேண்டும். பிறகு ஏன் மஞ்சள் பை? ஒருகாலத்தில், அதாவது... ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சில துணிக்கடைகள், தங்களின் விளம்பரத்துக்காகக் கடையின் பெயரை அச்சிட்ட மஞ்சள்நிற துணிப்பையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் ஊர்முழுக்க, நாடுமுழுக்க இது பரவி, துணிக்கடைகள் மட்டுமின்றி பலதரப்பட்ட வியாபார நிறுவனங்களும், தங்களின் நிறுவனப் பெயர் அச்சிடப்பட்ட துணிப்பைகளை கொடுக்க ஆரம்பித்தன.

மீண்டும் மஞ்சப்பை
மீண்டும் மஞ்சப்பை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், அவையனைத்தும் மஞ்சள் நிறத்திலானதாக இருக்கவில்லை. பல்வேறு நிறங்களிலும் இருந்தன. இப்போதும்கூட துணிப்பைகளைக் கொடுக்கும் வியாபார நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனாலும், `மஞ்சள் பை' என்பது அனைத்து நிற துணிப்பைகளுக்கும் அடையாள பெயராக நின்றுவிட்டது.
ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் அறிமுகமாகவே, `மஞ்சள் பை' என்று வழங்கப்பட்ட துணிப்பையானது வழக்கொழிய ஆரம்பித்துவிட்டது. கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக `மஞ்சள் பை' என்னவென்றே தெரியாது. துருவித் துருவிக் கேட்டால், லிங்குசாமி தயாரிப்பில் வெளியான `மஞ்சப்பை' என்கிற படத்தைத்தான் சொல்வார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கலந்த பொருள்களால் தயாரான பைகள்தான் தற்போது நீக்கமற நிறைந்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் இத்தகைய பைகளை ஒழித்துவிட்டு, துணிப்பைகளை மீண்டும் கொண்டுவருவதற்கு ஒரு இயக்கத்தையே தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்கதே! அதேசமயம், வழக்கம் போல கட்டம்போட்டு (ஃபிரேம்) சுவற்றில் மாட்டப்படும் திட்டமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை.

இதுபோல ஆயிரத்தெட்டு திட்டங்களைப் பார்த்துவிட்டோம், பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக. எதுவுமே, பயன்தரவில்லை என்பதுதான் எதார்த்தம். இதன் முதல் அத்தியாயம், தி.மு.க ஆட்சியில் அண்ணன் ஆற்காடு வீராசாமி (இவரை இன்றைய தலைமுறையில் பலருக்கும் தெரியாது) அமைச்சராக இருந்த 1996-2001 காலகட்டத்திலேயே பிளாஸ்டிக்குக்கு எதிராக ஒரு சட்டத்தை நீட்டுவோம் என்று சட்டமன்றத்தில் முழங்கினார். அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் கம்பெனிக்காரர்கள் எல்லாம் சென்று அமைச்சரைப் பார்த்துப் பேசினார்கள், அந்தப் பேச்சு சட்டமன்றத்தோடு போயே போச்.

பை
பை
Vikatan

இரண்டாவது அத்தியாயம்... ஜெயலலிதா ஆட்சி. அவருடைய காலத்திலும் ஆற்காடு வீராசாமி போலவே முழங்கினார்கள். பிறகென்ன, மீண்டும் பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது அத்தோடு போய்விட்டது.
பிறகு, 2006-ல் தி.மு.க. 2011 மற்றும் 2016-ல் அதிமுக. ஆட்சியைப் பிடித்தபோதும், இப்படி பிளாஸ்டிக் பை அத்தியாயங்கள் தொடர்ந்தன. அதன் தயாரிப்பாளர்களிடம் `பேச்சுவார்த்தை' நடக்காமலில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் ஒருபடி மேலே போய், இடையில் முதலமைச்சராக வந்த எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை தீவிரமாகவே கையில் எடுத்தார். `ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் (குறிப்பிட்ட மைக்ரான்களுக்கு கீழேயிருக்கும் பிளாஸ்டிக் பைகள்), கப்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு, விநியோகம், பயன்பாடு அனைத்துக்கும் 2019-ம் ஆண்டு புத்தாண்டு தினம் முதல் தடை' என்று அறிவித்து, அதை அதிரடியாக நிறைவேற்றவும் செய்தார்.


அதிகபட்சமாக ஒரு வாரகாலம்கூட அந்தத் தடை தாக்குப்பிடிக்கவில்லை. வழக்கம்போல, இதுவும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் பொழியும் ஒரு விஷயமாக மாறிப்போனது. ஆம், கடைக்காரர்களையும் தயாரிப்பாளர்களையும் மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், ஒரே வாரத்திலேயே பழையபடி எங்கெங்கு காணினும் யூஸ் அண்ட் த்ரோ கேரி பேக்குகள், கப்கள் என்று நிறைய ஆரம்பித்துவிட்டன. சமீபத்திய சென்னையின் பெருவெள்ளத்துக்குக்கூடக் காரணமாக நம்முடைய சிங்காரச் சென்னையின் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்படப் பலரும் பழிபோட்டது இந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மீதுதான். தி. நகரில் மட்டும் டன் கணக்கில் கேரிபேக்குகளை மழைநீர்க் கால்வாயிலிருந்து அகற்றியதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தார்கள்.

பை
பை
Vikatan

ஆகக்கூடி, `சட்டம் போட்டு தடுக்கற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது திட்டம்போட்டு சட்டம் போட வைத்த கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது' என்பதுதான் நிதர்சனம்.`மஞ்சள் பை' இயக்கத்துக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதுதான் நம் கவலையெல்லாம்.
ஆம், `மஞ்சள் பையே வருக வருக' மனதார வரவேற்கும்போது, அதே மனதின் ஓர் ஓரத்தில் பழைய அத்தியாயங்களின் பயமும் குடிகொண்டிருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.
மனித குலம் உள்ளவரை மஞ்சள் பை வாழவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. இதை நிகழ்கால முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, அடுத்தடுத்த காலங்களில் வரவிருக்கும் முதல்வர்களும் உறுதிப்படுத்துவார்கள் என்று நம்புவோம்!

- பூநி