Published:Updated:

நுகர்வு கலாசாரம் சூழலுக்கு எதிரானதாக இருக்கிறது... எச்சரிக்கும் சூழலியலாளர்கள்!

YOUTH AND CLIMATE | சூழல் கருத்தரங்கு ( Jerome K )

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் டான் பாஸ்கோ பள்ளி நிறுவனமும் இணைந்து ``இளையோரும், காலநிலை மாற்றமும்" (YOUTH AND CLIMATE) என்ற ஒருநாள் கருத்தரங்கை 28.10.22 அன்று சென்னை சாந்தோம் அருகில் செயின் பெட்ஸ் பள்ளியில் நடத்தியது.

நுகர்வு கலாசாரம் சூழலுக்கு எதிரானதாக இருக்கிறது... எச்சரிக்கும் சூழலியலாளர்கள்!

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் டான் பாஸ்கோ பள்ளி நிறுவனமும் இணைந்து ``இளையோரும், காலநிலை மாற்றமும்" (YOUTH AND CLIMATE) என்ற ஒருநாள் கருத்தரங்கை 28.10.22 அன்று சென்னை சாந்தோம் அருகில் செயின் பெட்ஸ் பள்ளியில் நடத்தியது.

Published:Updated:
YOUTH AND CLIMATE | சூழல் கருத்தரங்கு ( Jerome K )

தொழிற்புரட்சிக்கு பிறகு இயற்கை சுரண்டப்படுவதால்  காலநிலை மாற்றம், உணவு தட்டுப்பாடு, பெருந்தொற்று நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை உலகம் எதிர்கொள்கிறது. சூழலியல் சீர்கேட்டால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களாகவும் விளிம்புநிலை மக்களாகவும் இருக்கின்றனர். காலநிலை மாற்றத்துக்கு எதிரான கூக்குரல் ஆங்காங்கே  ஒலிக்கின்றன. அப்படி தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைக் காக்க போராடி வரும்  முக்கியமான அமைப்பாக ``பூவுலகின் நண்பர்கள்" விளங்குகிறது.

YOUTH AND CLIMATE | சூழல் கருத்தரங்கு
YOUTH AND CLIMATE | சூழல் கருத்தரங்கு

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் டான் பாஸ்கோ பள்ளி நிறுவனமும்  இணைந்து  ``இளையோரும், காலநிலை மாற்றமும்"  (YOUTH AND CLIMATE) என்ற ஒருநாள் கருத்தரங்கை 28.10.22 அன்று சென்னை சாந்தோம் அருகில் செயின் பெட்ஸ் பள்ளியில் நடத்தியது.

சூழல் நீதி..

இந்த கருத்தரங்கில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ``கடந்த ஆண்டுகளில் நாம் பல்வேறு  விளைவுகளை காலநிலை மாற்றத்தால் சந்தித்துவருகிறோம். தீபாவளி போன்ற  விழாக்காலங்களில் பட்டாசுகளால் காற்றும் ஒலியும் மாசுபடுகிறது.  பிளாஸ்டிக்கினால் பறவை விலங்கு  உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

வெளியில் செல்லும்போது மஞ்சப்பை எடுத்துசெல்ல வேண்டும். காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  உலகுக்கு சமூக நீதியில்  முன்மாதிரியா இருக்கும் தமிழகம் சூழல் நீதியிலும்  முன்மாதிரியாக திகழ வேண்டும்” என்றார்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

மேல்நாட்டவர்களின் நுகர்வு கலாச்சாரம்..

நீரியல் வல்லுநரும் பேராசிரியருமான ஜனகராஜன் பேசுகையில் , ``பஞ்சபூதங்கள் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்துள்ளது. இன்று இவை சீரழிந்துவருகின்றன. வானம், மீசோஸ்பியர் (Mesosphere), ட்ரோபோஸ்பியர் (Troposhpere) போன்ற பல்வேறு மண்டலங்களால் ஆனது. ஆய்வாளர்கள் வளிமண்டலங்கள் அனைத்தும் விரைவில் பிசைந்துவிடும் (Atmosphere Collapse) என்கின்றனர். வளிமண்டலம் சீர்கேட்டால் நாம் சுவாசிப்பதற்கு காற்றுகூட இருக்காது.

பேராசிரியர் ஜனகராஜன்
பேராசிரியர் ஜனகராஜன்
Jerome K

வருங்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் பேராபத்து என்னவென்றால்  நாமெல்லாம் உயிர்வாழ்வதே சவாலுக்குரியது. உலகில் உள்ள 50 பில்லியன் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம்   காரணம் சந்தைப் பொருளாதாரம். மரம் வளர்ப்பதால்  மட்டுமே காலநிலை மாற்றத்தை தணிக்க இயலாது.  மேல்நாட்டவர்களின் நுகர்வு கலாச்சாரம் சூழலுக்கு எதிரானதாகவே இருக்கிறது. நம்மிடமும்  நுகர்வு கலாச்சாரம் ஊடுரவ தொடங்கிவிட்டது. ஆனால்  இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை  நம்மிடம் மிச்சமுள்ளது. நமக்கு தேவை காலநிலை, சூழலியல் நீதி (climate justice)" என்றார்.

உடலுக்கு உகந்த உணவு..

சித்த மருத்துவர் சிவராமன் பேசுகையில், "இன்று பதினைந்து வயதுள்ள மாணவனுக்கும் கர்ப்பிணி பெண்ணுக்குமே புற்றுநோய் ஏற்படுகிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இருக்கும் புற்றுநோயால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா? நான் மார்பகத்துக்கு அறுவை சிச்சை செய்து கொண்டால் ஒற்றை மார்பில் பால் கொடுக்க முடியுமா ? போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்.

சித்த மருத்துவர் சிவராமன்
சித்த மருத்துவர் சிவராமன்
Jerome K

முன்பெல்லாம் ஐம்பது வயதுக்கு மேலான தாய்மார்களுக்கு தான் புற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் இன்று 30, 35 வயதில் உள்ளவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் நம் உணவுமுறை இயற்கையை விட்டு விலகியதே. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று  செயலி (app) முடிவு செய்யும்போது  இவ்வாறான அழிவு நோய்கள் வருவது இயல்பானவையே. எந்த உணவு நாம் வாழும் சூழலுக்கு உகந்ததோ அதுவே  நம் உடலுக்கும் உகந்தது" என்றார்.

இயற்கை சீறத் தொடங்கிவிட்டது..

மருத்துவரும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  எழிலன் பேசுகையில் "இயற்கை நம்மை திருப்பி அடிக்கிறது. காலநிலை மாற்றத்தினால் முதியோர்கள் அதிகம் பாதிக்கிறார்கள். முதியோர்கள் வெளியில் சென்றாலே  மயங்கி விழுகின்றனர். மாணவர்கள் ஃடீ ஹைடிரேஸன் (dehydration) போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன்
Jerome K

ஒரு புறம்  உணவுமிகுதியால் குறிப்பிட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இன்னொரு புறம் பசிக்கொடுமைகள் அதிகமுள்ள நாடாக நம் நாடு உள்ளது. பல்லுயிரியலின் பரிணாமம்தான் மனிதன். மனிதனின் மரபு அணுக்கள் சூழலுடன் தொடர்பு கொள்கின்றன. அதனால்  காலநிலை மாறும்போது  உடல்நிலை பாதிக்கிறது. மனிதனின் சுயநலத்தால் சுரண்டப்பட்ட இயற்கை சீறத் தொடங்கிவிட்டது. நோய்க்கிருமிகள் நீரிலும் உணவிலும் கலக்க தொடங்கிவிட்டன. அறிவியல் வளர்ச்சியை கொண்டு ஓரளவு தான் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். இயற்கையின்  பேரழிவை தடுப்பதற்கான முயற்சிகளை நாம் தாமதமாக்கிவிட்டோம்" என்றார்.  

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை..

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  சுந்தராஜன் பேசுகையில்,  "உலகத்தில் உள்ள  எந்த  உயிரினங்களுக்கும் பலி வாங்கும் குணமில்லை. ஆனால் மனிதனுக்கு தான் பலிவாங்கும் குணமுள்ளது. தொண்ணூறு  சதவீதம் உயிரினங்களுக்கு  ஞாபகம் சக்தி கூட கிடையாது. மனிதனால் இயற்கையை  கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாது. மனிதனால் இயற்கையுடன் இயைந்து  வாழத்தான்  முடியும்.

பூவுலகின் நண்பர்கள் - சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் - சுந்தர்ராஜன்
Jerome K

2004 –ம் ஆண்டு சுனாமி வந்த போது அறிவியல் வளர்ச்சி திளைத்த தமிழகத்தில் எண்ணற்றோர் இறந்துள்ளனர். ஆனால் அந்தமான் நிக்கோபரில் உள்ள  பழங்குடியினர் ஒருவர் கூட  இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதற்கு முன்னாள் கடல்  பின்வாங்கியது. அதனை பார்த்த பழங்குடியினர் சுதாரித்துக் கொண்டனர். உயரமான இடங்களில் பதுங்கி சுனாமியிடமிருந்து தற்காத்துக்கொண்டனர். ஆனால் நம்மவர்களுக்கு போதுமான புரிதல் இல்லை. பாரம்பரிய அறிவும் இயற்கையுடன் இயைந்து வாழ்தலும் பழங்குடியினரை காப்பாற்றியது. அறிவியல் வளர்ச்சி இயற்கை சீற்றத்தை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது. காலநிலை மாற்றம் நம் வாழ்வியலையே கேள்விக்குறியாக்கும் சூழ்நிலையில் வாழ்கிறோம்" என்றார்.

பாடகர் தெருக்குரல் அறிவு பேசுகையில் "நிலம் என்னுடையது என்று சொந்தம் கொண்டாடுபவர்கள் யாரும் நிலத்திற்காக   உழைக்கவில்லை; நிலமற்ற எளிய மக்களே நிலத்தை பாதுகாத்து வந்தனர். இன்று விலங்குகளை நேசிக்க கூடியவர்கள் இயற்கையின் ஒரு அங்கமான மனிதனை சமமாக மதிப்பதில்லை. அனைவரும் சமமாக பார்க்கும் சமநிலையான   எண்ணத்தை நம்முள் விதைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.