Published:Updated:

இறந்துகிடந்த தாய் புலி, உயிருடன் மீட்கப்பட்ட 2 குட்டிகள்... முதுமலையில் நிகழ்ந்த சோகம்!

tiger cub

பெண் புலி இறந்துகிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு புலிக் குட்டிகள் புதரில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டன.

இறந்துகிடந்த தாய் புலி, உயிருடன் மீட்கப்பட்ட 2 குட்டிகள்... முதுமலையில் நிகழ்ந்த சோகம்!

பெண் புலி இறந்துகிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு புலிக் குட்டிகள் புதரில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டன.

Published:Updated:
tiger cub

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று வழக்கமான ரோந்தில் ஈடுபட்டு வந்தனர்.

tiger found dead
tiger found dead

ஆச்சக்கரை எனும் இடத்தில் புலி ஒன்று இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்விடத்துக்கு வந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இறந்தது பெண் புலி என்றும் இதற்கு சுமார் 8 வயது இருக்கலாம் என்பதையும் உறுதி செய்தனர்.

tiger found dead
tiger found dead

மேலும் இரவு நேரம் என்பதால், இன்று காலை உடற்கூறாய்வு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

பெண் புலி இறந்துகிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு புலி குட்டிகள் புதரில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டன.

tiger cubs
tiger cubs

இது குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "இறந்த பெண் புலியின் உடலில் எந்தக் காயமும் தென்படவில்லை. இதன் அருகிலேயே இரண்டு குட்டிகளை மீட்டுள்ளோம். இறந்த புலியின் குட்டிகள்தான் இவை. பிறந்து 20 நாள்கள் ஆகியிருக்கும். தாயை இழந்து தவிக்கும் இரண்டு குட்டிகளையும் பராமரித்து வருகிறோம்.

தேசிய புலிகள் ஆணைய நெறிமுறையின்படி உயிரியல் பூங்காவுக்கு வழங்குவதா அல்லது முதுமலையில் வைத்து தொடர்ந்து பராமரிப்பதா என ஆலோசித்து வருகிறோம்" என்றனர்.

புலிக்குட்டி / tiger cub
புலிக்குட்டி / tiger cub

புலிகள் பாதுகாப்பு செயல்பாட்டாளர் ஊட்டி சுரேஷ், "இறந்த பெண் புலியின் உடலில் எந்தக் காயமும் இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முறையான விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.