Published:Updated:

அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்; ஆக்ரோஷத்தில் காட்டு யானைகள்; விழிக்குமா முதுமலை நிர்வாகம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதுமலையில் யானையைப் புகைப்படம் எடுக்கும் பயணி
முதுமலையில் யானையைப் புகைப்படம் எடுக்கும் பயணி

ஆபத்தை உணராமல் சில சுற்றுலாப் பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுவதால் வன விலங்குகள் ஆக்ரோஷமாக மாறுவதோடு அது அந்த பயணிகளின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும் என வன விலங்கு ஆர்வலர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இ-பாஸ் மற்றும் இ-ரிஜிஸ்ட்ரோஷன் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் மற்றும் 2-ம் கட்ட மலர் கண்காட்சி சீசன் கொண்டாட்டங்களால் மீண்டும் சுற்றுலாத்துறை சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

தொடர் விடுமுறை மற்றும் தற்போது ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையைக் கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இம்மாத துவக்கத்திலிருந்தே ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி ஏரி, பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இதமான காலநிலையை அனுபவித்து இயற்கை எழிலை கண்டு ரசித்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், நீலகிரியில் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

spotted deer
spotted deer
T23 புலியைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடக்கும் மசினகுடியில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்காதது ஏன்?

அதே சமயம், மசினகுடி, முதுமலை தெப்பக்காடு, கூடலூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் அருகில் நின்று புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் சில சுற்றுலாப் பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுவதால் வன விலங்குகள் ஆக்ரோஷமாக மாறுவதோடு அது பயணிகளின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும் என வன விலங்கு ஆர்வலர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஊட்டியைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் நம்மிடம் பேசுகையில், ``புலிகள் காப்பகமாக பராமரிக்கப்பட்டு வரும் முதுமலையில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சில நேரங்களில் சாலையைக் கடக்கும் அல்லது சாலை ஓரங்களில் தென்படும். வாகனத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தைரியத்தில் வன விலங்குகளின் அருகில் நின்று செல்ஃபி, வீடியோ, போட்டோக்களை எடுக்கின்றனர். மேலும் வன விலங்குகள் முன் கூச்சலிட்டு தொந்தரவு செய்கின்றனர். இதானால் யானை போன்ற வன விலங்குகள் ஆக்ரோஷமாக மாறி வாகனங்களைத் தாக்க ஆரம்பிக்கின்றன. இன்னும் சிலர் வாகனத்தை நிறுத்திவிட்டு வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். தடையை மீறி தின்பண்டங்களை வன விலங்குகளுக்கு வீசிச் செல்வதால் அவற்றுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற அத்துமீறலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும். சாலையோரங்களில் சி.சி.டிவி கேமராக்களைப் பொருத்தி தடுக்க வேண்டும். தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்"என்றார்.

முதுமலையில் யானையைப் புகைப்படம் எடுக்கும் பயணி
முதுமலையில் யானையைப் புகைப்படம் எடுக்கும் பயணி
9 மாதங்களுக்குப்பின் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில்...உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

இந்த அத்துமீறல் குறித்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினோம். ``காப்பக எல்லைக்குள் யார் அத்துமீறி நுழைந்தாலும் அபராதம் விதித்து வருகிறோம். சாலையோரங்களில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் பயணிகளை கண்காணிக்க வேட்டைத் தடுப்பு காவலர்களை நியமித்திருக்கிறோம். இதையும் மீறி ஒரு சிலர் இதுபோன்ற செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்‌. கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு