Published:Updated:

மலை உச்சியில் சமையல் வீடியோ, காப்புக்காட்டில் அத்துமீறிய யூடியூபர்கள்; நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!

`மலையுச்சியில் சமையல்' என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சமையல் செய்து யூடியூபில் பகிர்ந்து வரும் யூடியூபர்களின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

நாட்டின் முதல் பல்லுயிர் சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரியில் இரண்டு தேசிய பூங்காக்கள், நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு காப்புக் காடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஓரிட வாழ்விகள் மற்றும் நீர் நில வாழ்விகளின் கடைசிப் புகலிடமாக இந்தக் காடுகள் விளங்கி வருகின்றன.

காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
அ.தி.மு.க நிர்வாகியின் மரக்கடத்தலுக்கு உதவிய அதிகாரிகள்; சஸ்பெண்ட் செய்து வனத்துறை அதிரடி!

இயற்கை வளம் மிகுந்த இந்தக் காடுகளுக்குள் அத்துமீறி நுழையவும், படப்பிடிப்பு நடத்தவும், சமையல் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் உள்ளன. கடுமையான இந்தக் கட்டுப்பாடுகளை மீறி அவ்வப்போது காப்புக் காடுகளில் நுழைந்து சிலர் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். கொரோனா ஊரடங்கு காலங்களில் வனக்குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதும் வேதனையான உண்மையாக உள்ளது.

இந்நிலையில், `மலையுச்சியில் சமையல்' என்ற பெயரில் யூடியூபர்கள் சிலர், பாதுகாக்கப்பட்ட நீலகிரி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சமையல் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட `ட்ரோன்' கேமராக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காட்டுக்குள் உணவு சமைப்பது போன்ற செயல்கள் வன விலங்குகளுக்கு இடையூராக இருப்பதோடு யூடியூபர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!

இந்த அத்துமீறல் குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஊட்டி ஜனார்த்தனன், ``பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையின் அனுமதியின்றி நுழைவதே பெரிய தவறு. அதையும் மீறி ஆபத்தான மலை உச்சிகளுக்குச் சென்று அடுப்பை வைத்து உணவு சமைக்கின்றனர். இது காட்டுத்தீ அபாயம் மற்றும் வன விலங்குகளுக்கும் பெரும் தொல்லை கொடுக்கும் செயலாகும்.

இவர்கள் காடுகளில் வன விலங்குகளை எதிர்கொண்டால் இன்னும் பேராபத்தை ஏற்படுத்தும். மேலும், காட்டில் தடை செய்யப்பட்ட`ட்ரோன்' கேமராக்களைப் பயன்படுத்தியிருப்பது இந்த அத்துமீறலை மேலும் அதிகரிக்கும். இதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
காப்புக் காட்டில் அத்துமீறும் யூடியூபர்கள்!
ஒரு கிலோ ₹16,400; சர்வதேச ஏலத்தில் புதிய உச்சம்; இந்த நீலகிரி தேயிலையில் என்ன ஸ்பெஷல்?

இந்த விவகாரம் குறித்து நீலகிரி வனக்கோட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம், ``இது தொடர்பான புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளன. அவர்கள் சமையல் செய்த பகுதி வன நிலமா அல்லது தனியார் பட்டா நிலமா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வனத்தில் அத்துமீறியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு