Published:Updated:

அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமா? அறிவியலும் ஆன்மிகமும் என்ன சொல்கிறது?

கோடை வெயில்

வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்த வரை 'அக்னி நட்சத்திரம்' என்கிற பதத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அது ஜோதிடத்தில் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்துக் கூறப்படுவது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமா? அறிவியலும் ஆன்மிகமும் என்ன சொல்கிறது?

வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்த வரை 'அக்னி நட்சத்திரம்' என்கிற பதத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அது ஜோதிடத்தில் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்துக் கூறப்படுவது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

Published:Updated:
கோடை வெயில்

வெயிலின் உக்கிரம் தாளாது தவித்து வருகிற நேரத்தில் தற்போது 'அக்னி நட்சத்திரம்' தொடங்கியிருக்கிறது. இனி வெயிலின் உக்கிரம் இன்னும் கூடும் என்றும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் உலவுகின்றன. இவற்றின் உண்மைத்தன்மையைக் குறித்து அறிந்துகொள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் கேட்டோம்.

"வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை 'அக்னி நட்சத்திரம்' என்கிற பதத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அது ஜோதிடத்தில் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்துக் கூறப்படுவது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

வெயில்
வெயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வானிலை ஆய்வைப் பொறுத்தவரையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் கோடைக்காலம் ஆகும். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடைக்காலம் தொடங்கி விடுகிறது. வெப்பத்தைப் பொறுத்தவரை சராசரி அளவு என்பது 30 நாட்களுக்கும் சேர்த்து கணக்கிட்டுக் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை பொதுவான அளவீட்டில் கணக்கிட முடியாது. நிலவியல் அமைப்பைப் பொறுத்து வெப்பத்தின் தாக்கம் இருக்கும். சென்னை, கடலூர், நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் கடல் காற்று, கரைக்காற்று ஆகியவற்றில் எதன் வீச்சு அதிகமாக இருக்கிறதோ அதைப்பொறுத்து வெப்பநிலை இருக்கும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அளவு கூடுதலாகவும், உள் மாவட்டங்களில் கொஞ்சம் குறைவாகவும், மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதைவிடக் குறைவாகவும் இருக்கும் என்பது பொதுவான அளவீடு. இதிலும் சில மாற்றங்கள் நிகழ்வதுண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மே மாதத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. இந்த இயல்பான வெப்பநிலை என்பது அம்மாதத்தின் சராசரி வெப்பநிலையிலிருந்து கணக்கிடப்படுகிறது. வெப்பநிலை என்பது இடத்துக்கு இடம், ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். அதனை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டு அதன் சராசரி கண்டறியப்படும். 30 நாட்களில் 20 நாட்களுக்கும் அதிகமாக கூடுதல் வெப்பநிலை நிலவினால்தான் சராசரி வெப்பநிலை இயல்பை விடக்கூடும்.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில்தான் வெப்பநிலை காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நிலவியது. கடலூர், தொண்டி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இயல்பை விட குறைவான வெப்பநிலையே நிலவியது. உள் மாவட்டங்களான தஞ்சை, சேலம், கரூர் மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விடக்கூடுதலாக இருந்தது. ஆக, வெப்பநிலை என்பதை நாம் பொதுவான வரையறைகளுக்குட்படுத்தி விட முடியாது" என்றவரிடம் இம்மாதத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அந்தமானில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியிருக்கிறது. அது வலுப்பெற்று நகர்கையில் மேற்குத்திசையில் காற்று வீசினால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின்படி அக்னி நட்சத்திரத்துக்குப் பின் வெப்பம் அதிகரிக்கும் என்கிற எந்தத் தரவுகளும் இல்லை" என்றார் பாலச்சந்திரன்.

அக்னி நட்சத்திரம் எதன் அடிப்படையில் வகுக்கப்படுகிறது என சேஷாத்ரிநாத சாஸ்திரிகளிடம் கேட்டோம்...

சூரியன்
சூரியன்
https://pixabay.com

"27 நட்சத்திரங்களும் பூமியை வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஆண்டுக்கு 14 நாட்கள் நிலை கொண்டிருக்கும். இந்த நட்சத்திரங்களில் ஒன்றான கிருத்திகை நட்சத்திரம் நம் நேர்கோட்டில் வருவதைத்தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறோம். கிருத்திகை நட்சத்திரம் தீக்கனல் போன்றது என வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே கிருத்திகை நட்சத்திரம் வருகிற போது வெப்பம் கூடுதலாக இருக்கும் என்பதால் அதனை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறோம்.

சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்
சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்

மே 4-ம் தேதி அக்னி நட்சத்திர தோஷாரம்பம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தோஷம் இல்லை. தாங்க முடியாத வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அப்படியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மே 28-ம் தேதி அக்னி நட்சத்திர நிமிர்த்தி ஏற்படுகையில் வெப்பம் முற்றிலுமாகக் குறைந்து போகும். வேதத்தில் சொல்லப்பட்ட இக்கணக்கை ஜோதிடம் எடுத்துக்கொண்டது. அதனைக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகிறது" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism