Published:Updated:

இதற்காகத்தான் 10,000 மூங்கில் விதைப் பந்துகள் வீசப்படுகின்றன! நீலகிரி வனத்துறையினர் சொல்லும் தகவல்!

விதைப் பந்துகள்

யானைகளின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையிலும் சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் வளங்களை இழந்துவரும் காட்டுக்கு வளம் சேர்க்கவும் 10,000 மூங்கில் விதைப் பந்துகளை நாடுகாணி கோல்டு மைன்ஸ் பகுதியில் வனத்துறையினர் வீசி வருகின்றனர்.

இதற்காகத்தான் 10,000 மூங்கில் விதைப் பந்துகள் வீசப்படுகின்றன! நீலகிரி வனத்துறையினர் சொல்லும் தகவல்!

யானைகளின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையிலும் சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் வளங்களை இழந்துவரும் காட்டுக்கு வளம் சேர்க்கவும் 10,000 மூங்கில் விதைப் பந்துகளை நாடுகாணி கோல்டு மைன்ஸ் பகுதியில் வனத்துறையினர் வீசி வருகின்றனர்.

Published:Updated:
விதைப் பந்துகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள நாடுகாணி, கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்க சுரங்கத் தொழிலில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். தங்கம் எடுப்பதற்காக இந்தக் காட்டில் ஆயிரக்கணக்கான சுரங்கக் குழிகள் தோண்டப்பட்டிருப்பதால், வனத்தின் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. யானைகளின் மிக முக்கியமான வாழிடமாகவும் வழித்தடமாகவும் இருக்கும், இந்தப் பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குழிக்குள் விழுந்து உயிரிழக்கின்றன.

விதைப் பந்துகள்
விதைப் பந்துகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலான யானைக் கூட்டங்கள் இந்தப் பகுதியைத் தவிர்த்து அருகில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலும் வருகை புரிகின்றன. இந்நிலையில், இந்த வனத்தின் இயற்கை வளத்தை மீட்டெடுக்கும் வகையில் மூங்கில்களைச் செழிக்க வைக்கும் முயற்சியில் கூடலூர் வனத்துறையினர் களமிறங்கி இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அசத்தல் முயற்சி குறித்து தெரிவித்த கூடலூர் வனத்துறையினர், ``பந்தலூர் வனச்சர அலுவலர் தலைமையிலான வனப்பணியாளர்கள், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து முதல் கட்டமாக சுமார் 1,000 மூங்கில் விதைப் பந்துகளை கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் வீசியிருக்கிறோம்.

விதைப் பந்துகள்
விதைப் பந்துகள்

தங்கச் சுரங்கக் குழிகளால் பாதிப்படைந்த வனத்தைப் பசுமைக்கு மாற்றவும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும் இது வழிவகை செய்யும் என நம்புகிறோம்" என்றனர். இந்த முயற்சிக்கு சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism