Published:Updated:

`கலர், கலராக இருந்தா அது வெளிநாட்டுப் பறவையா? இது நம்ம ஊர் பறவைங்க!' - பறவைகள் சூழ் உலகு - 5

இளம் மஞ்சள்மூக்கு நாரை பறவைகள் ( சங்கர் சுப்ரமணியன் )

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அனைவராலும் அறியப்படும் பால்பாண்டி அண்ணன், ``மஞ்சள்மூக்கு நாரை எங்கள் ஊரில் தை அமாவாசையின்போது கூடுகளை அமைக்கும். ஆடி அமாவாசைக்கு முன் குஞ்சுகள் பொரித்துவிட்டு பறந்து சென்றுவிடும்" என்பார்.

`கலர், கலராக இருந்தா அது வெளிநாட்டுப் பறவையா? இது நம்ம ஊர் பறவைங்க!' - பறவைகள் சூழ் உலகு - 5

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அனைவராலும் அறியப்படும் பால்பாண்டி அண்ணன், ``மஞ்சள்மூக்கு நாரை எங்கள் ஊரில் தை அமாவாசையின்போது கூடுகளை அமைக்கும். ஆடி அமாவாசைக்கு முன் குஞ்சுகள் பொரித்துவிட்டு பறந்து சென்றுவிடும்" என்பார்.

Published:Updated:
இளம் மஞ்சள்மூக்கு நாரை பறவைகள் ( சங்கர் சுப்ரமணியன் )

கடந்த வாரங்களில் கொக்குகள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் நாரைகள் குறித்துப் பார்க்கலாம். நாரைகள் பொதுவாக பெருங்கொக்குகள் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். இவற்றுக்கு கால்கள் மற்றும் கழுத்து நீண்டிருக்கும். கொக்குகள் பறக்கின்றபோது கழுத்தை வளைத்து வைத்துக்கொள்ளும். ஆனால், நாரைகளோ நேராக முன்னே நீட்டிக்கொண்டு வைத்து பறக்கும்.

மீனைக் கவ்விக் கொண்டிருக்கும் மஞ்ச மூக்கு நாரைகள்
மீனைக் கவ்விக் கொண்டிருக்கும் மஞ்ச மூக்கு நாரைகள்
கார்த்திக் அழகு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரைகளில் மஞ்சள் மூக்கு நாரை என்பது பரவலாகக் காணப்படும் ஒரு பறவை இனம். இதை ஆங்கிலத்தில் `பெயின்ட்டட் ஸ்டார்க்' (Painted stork) என்று அழைப்பார்கள். இதனுடைய அறிவியல் பெயர் `மிக்டீரியா லியூக்கோசெபாலா' (Mycteria leucocephala) என்பதாகும். இதற்கு சங்குவளை நாரை என்ற பெயரும் உண்டு. நமது வீட்டுச் சேவலைவிட அளவில் பெரியதாக இருக்கும். பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (IUCN) அறிவித்துள்ள செம்பட்டியலில் மஞ்ச மூக்கு நாரையானது கூடிய விரைவில் அழிவிற்குள்ளாகக் கூடிய (Near Threatened) இனமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரையறை: உருவில் பெரிய இப்பறவையின் அலகு மஞ்சளாகவும், முகம் சிவந்தும் இருக்கும். இறக்கை நுனிகள் இளஞ்சிவப்பு மற்றும் கருமையானவை. கால்கள் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறமானவை. இளம்பறவைகள் சாம்பல் நிறமானவை.

பண்புகள்: ஆழம் குறைந்தப் பகுதிகளில் அலகால் துழாவியபடி இரை தேடும். கொக்கைப் போன்று ஓரிடத்தில் நில்லாமல் வேகமாக அங்குமிங்கும் நடந்துகொண்டு இரை தேடிக் கொண்டிருக்கும். மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாம்புகளை உணவாக உட்கொள்ளும்.

இளம் பறவை
இளம் பறவை
சங்கர் சுப்பிரமணியன்

இனப்பெருக்கம்: ஜனவரி முதல் மே மாதம் வரையில் நீர்நிலைகளில் உள்ள மரங்களிலும் நீர் நிலைகளையொட்டிய கிராமங்களில் உள்ள மரங்களிலும் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்யும். கூடுகள் அமைப்பதற்கு மரக்குச்சிகளை வாயில் கவ்விக்கொண்டு இப்பறவைகள் பறப்பதைக் காண்பது அவ்வளவு அழகு. குச்சிகளைக் கொண்டு மரங்களில் மேடை போன்ற கூட்டை இப்பறவைகள் அமைக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இப்பறவைகள் அலகைத் தட்டி கைத்தட்டுவது போன்ற ஒலிகளை எழுப்பிக்கொண்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அனைவராலும் அறியப்படும் பால்பாண்டி அண்ணன், ``மஞ்சள்மூக்கு நாரை எங்கள் ஊரில் தை அமாவாசையின்போது கூடுகளை அமைக்கும். ஆடி அமாவாசைக்கு முன் குஞ்சுகள் பொரித்துவிட்டு பறந்து சென்றுவிடும்" என்பார். கூந்தன்குளத்தில் இப்பறவைகள் குளங்களில் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள வீடுகளிலும் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் மேற்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் குஞ்சுகளுக்கு தாய் பறவைகள் இரைகளை ஊட்டும்.

அதிகமாகச் சாப்பிட்ட குஞ்சுகள் செரித்த உணவுகளை மலத் துவாரம் வழியாகவும், செரிக்காத கழிவுகளை வாயின் வழியாகவும் எச்சமாக வெளியேற்றும். அந்தச் சமயத்தில் அளவுக்கு அதிகமான நெடி வீசும். குறிப்பாக, மழைக்காலங்களில் நெடி மூக்கைத் துளைக்கும். இருந்த போதிலும் கூந்தன்குளம் ஊர் மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் பல நூறு ஆண்டுகளாகத் தங்களை நம்பி வரும் பறவைகளுக்கு மகிழ்ச்சியுடன் இடமளிக்கின்றனர். அவர்களின் இந்த அளப்பரியா சேவை பாராட்டப்பட வேண்டியவை. இது போன்ற கிராமங்களைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கும் பசுமை வீரன் (Green Champion) விருதை வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

மனிதனுக்கும் பறவைகளுக்கும் உண்டான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பது வேதனைக்குரிய செய்தி. மஞ்ச மூக்கு நாரை நமது ஊர்ப்பறவை. ஆனால், பெரும்பாலான ஊடகங்களில் வெளிநாட்டுப் பறவைகள் கூந்தன்குளத்தில், வேடந்தாங்கலில், வடுவூரில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ளன என மஞ்சள் மூக்கு நாரை படங்களுடன் செய்திகள் இன்றளவும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகத்தில் குங்சுகளுடன் மஞ்ச மூக்கு நாரை
திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகத்தில் குங்சுகளுடன் மஞ்ச மூக்கு நாரை
பட உதவி அருண்குமார்

வெளிநாடுகளில் இருந்து வருகைபுரியும் பறவைகள் மட்டும் பல வண்ணங்களில் இருப்பதில்லை. நம் ஊர்ப் பறவைகளும் வண்ணமயமாகத்தான் இருக்கும். குறிப்பாக, இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவைகள் வண்ணமயமாகவும், கூடுதலான மெல்லிறகுகளைக் கொண்டும் காணப்படும். எனவே, வண்ணமயமாக இருந்தால் வெளிநாட்டுப் பறவைகள் என்று கருத வேண்டாம். நாம் தொடர்ச்சியாகப் பறவைகளை உற்று நோக்கத் தொடங்கும்போது நமக்கு இது போன்ற சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை.

பறக்கும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism