Published:Updated:

அழிவின் விளிம்பில் `காவிரி புலி' மஹஸீர் மீன்; காப்பாற்றக் கோரும் உயிரியலாளர்கள்!

காவிரியில் ஒரு காலத்தில் மிக எளிதாக காணப்பட்ட நீர் வாழ்வுகள் பல இன்றைக்கு அரிதாகிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய துயரமான பட்டியலில் orange-finned humpback mahseer எனப்படும் `மஹஸீர்’ மீன் இனம் சேர்ந்திருப்பது வேதனையான உண்மை.

கர்நாடக மாநிலம் குடகில் உற்பத்தியாகும் காவிரி, பல கிளை ஆறுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு சுமார் 800 கிலோமீட்டர் பயணித்து, அகண்ட காவிரியாக வங்கக்கடலில் கலக்கிறது.

மாயாறு
மாயாறு
Photo: Sandeep Menon
பள்ளத்தில் விழுந்து விபத்து; பலனளிக்காத சிகிச்சை; பரிதாபமாக உயிரிழந்த குட்டி யானை!

பாசன வளத்தின் குறியீடாக விளங்கும் இந்த காவிரி ஆறு, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்து வருகிறது. எண்ணற்ற நன்னீர் வாழ் உயிரினங்களை தன்னிடம் கொண்டிருந்த வளம் மிகுந்த ஆறாக ஒரு காலத்தில் இருந்தது ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது.

காவிரியில் ஒரு காலத்தில் மிக எளிதாக காணப்பட்ட நீர் வாழ்வுகள் பல இன்றைக்கு அரிதாகிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய துயரமான பட்டியலில் orange-finned humpback mahseer எனப்படும் `மஹஸீர்’ மீன் இனம் சேர்ந்திருப்பது வேதனையான உண்மை.

orange-finned humpback mahseer
orange-finned humpback mahseer
Photo: Sandeep Menon

54 கிலோ எடை வரை வளரக்கூடிய நன்னீர் வாழ்வியான மஹஸீர் மீன்கள் ஒரு காலத்தில் காவிரி ஆறு முழுக்க பரவலாக காணப்பட்ட ஒன்றாகும். பெருமழை காலங்களிலும் முட்டையிடும் சமயங்களிலும் நீர் பாயும் திசைக்கு எதிர்திசையில் நீந்தக்கூடிய தன்மையுடைய இந்த மீன்கள் `காவிரி ஆற்றின் புலி' என அழைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இந்த வகை மீன் இனம்,தென்னிந்தியாவில் கர்நாடகாவின் குடகு, சாம்ராஜ் நகர் காவிரி வனவிலங்கு சரணாலயம், முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இடையே ஓடக்கூடிய மாயாற்றில் காணப்படுவதாக தென்னிந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சங்கம் (WASI) தெரிவித்துள்ளது.

மாயாறு
மாயாறு

தென்னிந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், ``இந்த அமைப்பானது கடந்த 50 ஆண்டுகளாக உயிரினங்களை ஆராய்ச்சி செய்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடக ஆறுகளில் காணப்படும் ஹம்ப் பேக் மஹஸீர் மீனுடன் மற்ற வகை மீன்களுடன் காணப்படுகின்றன. இதனால் இவற்றிற்கு இடையே கலப்பினம் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஆனால் மாயாற்றில் இந்த வகை மீன்கள் மட்டும் காணப்படுவதால், இவற்றின் கடைசி புகலிடமாக மாயாறு உள்ளது. காவிரியில் அணை, தடுப்பணைகள் அதிகரிக்கப்பட்டு மற்ற மீன் இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்தது.

orange-finned humpback mahseer
orange-finned humpback mahseer
Photo: Sandeep Menon

தமிழகத்தைப் பொறுத்தவரை தெங்குமரஹாடா முதல் மங்களபட்டி பவர் பவுஸ் வரையிலான மாயாற்று வழித்தடமே இவற்றின் கடைசிப் புகலிடமாக உள்ளது. இரு மாநில வனத்துறையும் இவற்றை பாதுகாக்க ஆதரவு அளித்து வருகின்றன,"என்றனர்.

பாதுகாப்பு உயிரியலாளர் ஜான்சிங் ,``தெங்குமாரஹாடா கிராமத்தில் இந்த வகை மீன்களை இனப்பெருக்கம் செய்ய முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

மாயாறு
மாயாறு
Photo: Sandeep Menon
வனவிலங்குகளைக் காக்க மறுவாழ்வு மையங்கள்; தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஆர்வலர்கள்!

உயிரியலாளர்கள் குழு இந்த திட்டத்தை ஆய்வு செய்து மாயாற்றில் இருந்து கருவுற்ற முட்டைகளை சேகரித்து இனப்பெருக்க தொட்டியில் பராமரித்து மற்ற இடங்களிலும் அறிமுகப்படுத்தலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு