Published:Updated:

வருசநாட்டில் மர்மமான முறையில் காட்டுமாடு இறப்பு! – வேட்டை காரணமா?

வருசநாடு மலைப்பகுதியில் ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

காட்டு மாடு
காட்டு மாடு ( வீ.சக்தி அருணகிரி )

வருசநாடு மலைப்பகுதியில் ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காட்டு மாடு வேட்டையாடப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

காட்டு மாடு
காட்டு மாடு
வீ.சக்தி அருணகிரி

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடுவது தொடர் கதையாகியுள்ளது. மலைப்பகுதியில் உள்ள இந்திராநகர் குடியிருப்புப் பகுதி அருகே காட்டுமாடு ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று இறந்த காட்டுமாட்டின் உடலைக் கைப்பற்றினர்.

``இறந்த காட்டு மாட்டுக்கு மூன்று வயது இருக்கலாம். வேறு வன விலங்குகள் இதை தாக்கியதா அல்லது வேட்டையாடப்பட்டதா என விசாரித்துவருகிறோம். அருகே உள்ள மலைக் கிராம மக்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்பகுதியில் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர், காட்டுமாடு வேட்டையாடப்பட்டது. இப்போது மர்மமான முறையில் காட்டுமாடு இறந்துள்ளது.

இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர், காட்டுமாடு வேட்டையாடப்பட்டது. இப்போது மர்மமான முறையில் காட்டுமாடு இறந்துள்ளது. போதிய மழை இல்லாததால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதி அருகே வருவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில மர்மக் கும்பல் தொடர் வேட்டையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.