Published:Updated:

ரயில்கள் மூலம் தமிழகத்துக்குப் படைவெட்டுக்கிளிகள் பரவ வாய்ப்புண்டா?

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

30 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய மாநிலங்களில் கதிர் நாவாய்ப் பூச்சித்தாக்குதல் உருவானபோது இங்கு அதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அப்போதும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் சொன்னார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

படை வெட்டுக்கிளிகளின் தாக்குதலால், வட இந்திய விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விளைவிக்கப்பட்டிருந்த பல லட்சம் ஏக்கர் பயிர்களை, இந்தப் படை வெட்டுக்கிளிகள் அழித்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்குப் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல், பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருவதால், தமிழக விவசாயிகள் மத்தியில் அச்சம் உருவாகி வருகிறது.

விவசாயி சுகுமாறன்
விவசாயி சுகுமாறன்

தமிழக வேளாண்மைத்துறையினரோ, 'படை வெட்டுக்கிளிகளால் இங்குள்ள பயிர்களுக்குப் பாதிப்பு வராது' எனத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் விவசாயத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயிகளோ, 'இப்பிரச்னையில் அலட்சியம் காட்டக்கூடாது' எனவும், 'தமிழக கிராமங்களுக்குள்ளும் படை வெட்டுக்கிளிகள் படையெடுக்கலாம்' என எச்சரிக்கிறார்கள். தஞ்சையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுகுமாறன், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வழிக்காட்டுகிறார்.

"தமிழக வேளாண்மைத்துறை வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். படை வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்குள்ளும் படையெடுத்து, இங்குள்ள பயிர்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இங்கு அவற்றின் பாதிப்பு வராது எனச் சொல்வது ஏற்புடையதல்ல. வேளாண்மை அலுவலர்களின் கணிப்புகளை, இதுபோன்ற பூச்சிகள் ஏற்கெனவே பல முறை பொய்யாக்கி இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய மாநிலங்களில் கதிர் நாவாய் பூச்சித்தாக்குதல் பெரியளவில் விஸ்வரூபம் எடுத்தபோது, இங்கு அதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அப்போதும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் சொன்னார்கள். பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து, இங்கு கதிர் நாவாய்ப் பூச்சிகள் வர சாத்தியமில்லை என்பது அவர்களது கணிப்பாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், வட இந்திய மாநிலங்களிலிருந்து, தமிழ்நாட்டிற்கு வந்த ரயில்களின் மூலம் கதிர் நாவாய்ப் பூச்சிகள் தமிழக கிராமங்களுக்குள் படையெடுத்து, பயிர்களை நாசப்படுத்தியது.

படைவெட்டுக்கிளிகள்
படைவெட்டுக்கிளிகள்
AP

பொதுவாகவே மின் விளக்கின் மஞ்சள் வெளிச்சம், பூச்சிகளை ஈர்க்கக்கூடியது. ரயில்களின் முகப்பு விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சத்தை நோக்கி, கதிர் நாவாய், வெட்டுக்கிளிகளிகள் போன்ற பூச்சிகள் ஏராளமான எண்ணிக்கையில் வந்து அமரும். அதன் பிறகு ரயில் பெட்டிகளின் உள்ளே உள்ள வெளிச்சத்திற்கு அங்கேயும் சென்று அமரும். ரயில்கள் கிராமங்களின் வழியாகச் செல்லும்போது, அங்குள்ள தெரு மின் விளக்கு, வயல்களின் போர்வெல்லில் எரியக்கூடிய மின் விளக்கை நோக்கி வந்தடையும். கொரோனா ஊரடங்கால் தற்போது, ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு வேண்டுமானால் படை வெட்டுக்கிளிகள் பாதிப்பு இங்கு வராமல் இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயில்களின் முகப்பு விளக்குகளில், மஞ்சள் நிற வெளிச்சத்திற்கு மாற்றாக, நீலநிற எல்.இ.டி விளக்குகளைப் பொருத்தவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், குறுவை பருவத்தில் பொதுவாகவே பூச்சித்தாக்குதல் அதிகம் ஏற்படாது. ஆனால் ரயில் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கும்போது, வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் படை வெட்டுக்கிளிகள் படையெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சம்பா பருவ காலநிலை என்பது பூச்சித்தாக்குதலுக்கு உகந்தது. எனவே அப்போது இதன் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே தமிழக வேளாண்மைத்துறை இதற்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். ரயில்களின் முகப்பு விளக்குகளில், மஞ்சள் நிற வெளிச்சத்திற்கு மாற்றாக, நீலநிற எல்.இ.டி விளக்குகளைப் பொருத்தவேண்டும். நீலநிற வெளிச்சம் பூச்சிகளுக்குப் பிடிக்காது. விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள போர்வெல் மின் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். வயல்களில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு வைத்துப் பறவைத் தாங்கிகளை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் ஆந்தை உள்ளிட்ட பறவைகளின் வருகையானது, படை வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும். பகல் நேரங்களில் இன்னும்பல வகையான பறவைகளின் வருகையால், படை வெட்டுக்கிளிகளின் வருகையைத் தடுக்கலாம். இதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் வேளாண்மைத்துறையினர் எற்படுத்த வேண்டும்” என்றார்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
AP
வெட்டுக்கிளி படையெடுப்பு... அழிவுக்கான ஆதாரமா? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இதுகுறித்து தமிழக வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் பேசியபோது ‘’தமிழ்நாட்டிற்குள், படை வெட்டுக்கிளிகள் தாக்குதல் வர வாய்ப்பில்லை. காரணம், விந்தியமலை மற்றும் தக்காணபீடபூமி நிலப்பகுதியைத் தாண்டி, இங்கு பூச்சிகள் வந்தது இல்லை. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம், படை வெட்டுக்கிளி பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களை, தமிழக வேளாண்மைத்துறை தீவிரமாக உற்றுநோக்குகிறது. படை வெட்டுக்கிளிகள் இங்கு வந்தால் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு