Published:Updated:

பழைய துணிகளையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு!

சேகரிக்கப்படும் கழிவுகள்

சென்னையின் முக்கிய கல்லூரிகளில், வேண்டாதவை என்று நிராகரிக்கப்படும் கழிவுகளைத் திரட்டி, அவற்றைப் பயனுள்ள வகையில் உபயோகத்துக்குக் கொண்டு வருகின்றனர்.

பழைய துணிகளையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு!

சென்னையின் முக்கிய கல்லூரிகளில், வேண்டாதவை என்று நிராகரிக்கப்படும் கழிவுகளைத் திரட்டி, அவற்றைப் பயனுள்ள வகையில் உபயோகத்துக்குக் கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
சேகரிக்கப்படும் கழிவுகள்

நாம் தினமும் கழிவுத் தொட்டிகளிலும் குப்பை வண்டிகளிலும் வீசும் குப்பைகளில், யாருக்காவது பயன்படும் பொருள்கள் இருக்கலாம். கழிவுகள் என்று நாம் நினைக்கும் பொருள்கள், வேறு சிலருக்கு தேவையானதாக இருக்கக்கூடும். கழிவுகளை மறுபயன்பாடு செய்தால், பள்ளிக்கரணை, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பில்லாமல் கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மைப்பணியாளர்களின் பணிச்சுமையும் குறையும்.

கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு
கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், குப்பைகளை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்த பெரும்பாலும் யாருமே முன்வருவதில்லை; அவ்வளவு ஏன்? மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரித்து கழிவுகளை சேகரிக்க வருவோரிடம் கொடுக்கக்கூட நம்மில் பலரும் முன்வருவதில்லை. கழிவுகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று மக்களிடம் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார், ஆஸம் பவுண்டேசன் நிறுவனர் ருக்மணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸம் பவுண்டேசன், தற்போது சென்னையின் முக்கிய கல்லூரிகளான எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி, லயோலா கல்லூரி (மகாலிங்கபுரம்), புதுக் கல்லூரி ( ராயப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (கோட்டூர்புரம்), எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க், எம்.ஐ.டி (குரோம்பேட்டை) ஆகிய கல்லூரிகளில், குப்பையாக நினைத்து மக்கள் ஒதுக்கும் பொருள்களைத் திரட்டுகிறது. வீடுகளில் உள்ள பழைய துணிகள், பழைய மற்றும் கிழிந்த செருப்புகள், இ-வேஸ்ட் போன்ற கழிவுகளைத் திரட்டி அவற்றைப் பயனுள்ள அழகிய பொருள்களாக மாற்றிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றனர். இதற்கான சேகரிக்கும் நிகழ்வு, ஜூன் 3-ம் தேதியில் இருந்து 5-ம் தேதி வரை நடைபெற்றது.

கழிவுக் கிடங்கு
கழிவுக் கிடங்கு

இது குறித்து ஆஸம் ஃபவுண்டேஷன் நிறுவனர் ருக்மணி பேசும்போது, ``பெரும்பாலான மக்கள், கழிவுகளைப் பிரித்து தராததால், மக்கும் குப்பையும் மக்கா குப்பையும் கலந்து யாருக்கும் பயன்படாமல் போகிறது. இதனால் வெட்டவெளிகளில் கழிவுகளை, டன் கணக்கில் கொட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அரசு சொல்வதுபோல் கழிவுகளை, மக்கும் குப்பைகளை தனியாகவும் மக்காத குப்பைகளான பாட்டில்களைத் தனியாகவும், சானிடரி நாப்கின் உள்ளிட்ட சிவப்பு நிற கழிவுகளைத் தனியாகவும் பிரித்துக் கொடுத்தால், அவற்றில் ஒரு சில கழிவுகளைப் பயன்படுத்தலாம். அவற்றைக் கையாளும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் இது எளிதாகும். இதை வலியுறுத்தி, ஆஷம் ஃபவுண்டேஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குப்பைகள் குறித்த விழிப்புணர்வுக்காகவே கல்லூரிகளில் குப்பைகளை வாங்குகிறோம்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ருக்மணியின் தோழி நீரஜா பேசும்போது, ``இந்த நிகழ்வு ஆரம்பித்த கடந்த 2 நாள்களில், பெரும்பாலும் துணிகளைத்தான் மக்கள் கொண்டு வந்தனர். ஓரளவு நல்ல துணியாக இருந்தால் யாருக்காவது பயன்படும் வகையில் கொடுத்துவிடுவோம்.

 ருக்குமணி
ருக்குமணி

கிழிந்த நைந்த துணிகளை மறுசுழற்சி செய்து கால்மிதியடி செய்யவும், பர்ஸ் போன்ற அழகிய பொருள்கள் செய்யவும் பயன்படுத்தலாம். மிகவும் மோசமான துணிகள் என்றால் துறைமுகக் கப்பல்களில் உள்ள கிரீஸ் போன்றவற்றைத் துடைக்க அவற்றைப் பயன்படுத்தலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism