மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகரங்கள் மற்றும் நகரங்களில் ஒவ்வொரு நாளும் குவியும் டன் கணக்கான கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய முடியாமல் நிர்வாகங்கள் திணறி வருகின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திலும் ஊட்டி, கூடலூர், நெல்லியாளம் போன்ற நகாட்சிகள் கழிவுகளை மேலாண்மை செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், குன்னூர் நகராட்சியின் அடுத்த சாதனையாக கோழி, மீன் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை தன்னார்வலர் ஒருவரின் தொழில்நுட்ப உதவியுடன் 30 நாள்களில் உயர் ஊட்ட இயற்கை உரமாக மாற்றி அசத்தி வருகின்றனர்.
குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் செயல்பட்டுவரும் நகராட்சி குப்பைக் கிடங்கை முன்மாதிரி கிடங்காக மாற்றிவரும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்த வசந்தன் இந்த முன்னெடுப்பு நம்மிடம் பகிர்கையில், ``குன்னுார் நகராட்சியில் ஒவ்வொரு நாளும் 4 முதல் 5 டன் கிழிவுகள் சேகரமாகின்றன. இவற்றில் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் உலர வைத்து மக்கச் செய்து உரமாக மாற்றுகிறோம். முறையாக பதப்படுத்த நல்ல காற்றோட்டம் இருக்கும் இடம் தேவைப்படுகிறது.

தொடர்ந்து பதப்படுத்தி வரும் நிலையில் 30 நாள்களில் உயர் ஊட்டம் நிறைந்த இயற்கை உரமாக மாறுகிறது. இந்த இயற்கை உரம் ஒரு கிலோ 3 ரூபாய் முதல் 10 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவது சுற்றுச்சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன" என்றார்.
குன்னூர் நகராட்சியின் இந்த சாதனை முயற்சி சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.