Published:Updated:

தமிழ்நாட்டின் முதல் குப்பை சேகரிப்பு மையம்; வரவேற்பைப் பெறும் குன்னூர் நகராட்சியின் முயற்சி!

குப்பை சேகரிப்பு மையம்

``தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளைக் கொடுக்க தவறுபவர்கள் வீட்டுக் கழிவுகளை அருகில் இருக்கும் குன்னூர் ஆறு மற்றும் அருகில் இருக்கும் வனங்களில் வீசி விடுகிறார்கள். இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம்."

தமிழ்நாட்டின் முதல் குப்பை சேகரிப்பு மையம்; வரவேற்பைப் பெறும் குன்னூர் நகராட்சியின் முயற்சி!

``தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளைக் கொடுக்க தவறுபவர்கள் வீட்டுக் கழிவுகளை அருகில் இருக்கும் குன்னூர் ஆறு மற்றும் அருகில் இருக்கும் வனங்களில் வீசி விடுகிறார்கள். இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம்."

Published:Updated:
குப்பை சேகரிப்பு மையம்

பவானி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய குன்னூர் ஆற்றில் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கடுமையான மாசு ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் இந்த ஆறு மாசுபடுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக குன்னூரில் குப்பை சேகரிப்பு மையம் ஒன்றை முன் முயற்சியாக தொடங்கியுள்ளனர்.

குன்னூர் ஆறு
குன்னூர் ஆறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குன்னூர் ஆற்றில் குப்பைகளைக் கொட்ட வரும் நபர்களிடமிருந்து குப்பைகளைச் சேகரித்து கிடங்கிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இந்த புது முயற்சியை தொடங்கய கிளீன் குன்னூர் அமைப்பின் நிர்வாகிகளிடம் பேசியபோது, ``நகராட்சி தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு வாகனத்தில் சென்று குப்பைகளைச் சேகரித்து வருகிறார்கள். தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளைக் கொடுக்க தவறுபவர்கள் வீட்டுக் கழிவுகளை அருகில் இருக்கும் குன்னூர் ஆறு மற்றும் அருகில் இருக்கும் வனங்களில் வீசி விடுகிறார்கள். இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம். அவை மழைக்காலங்களில் ஆற்றில் அடித்துவரப்பட்டு குவியலாக மாறுகின்றன.

குப்பை சேகரிப்பு மையம்
குப்பை சேகரிப்பு மையம்

குன்னூர் ஆற்றின் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமார் 75-100 டன் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் குவிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளின் அளவை குறைக்கும் முயற்சியாகத் தமிழ்நாட்டில் முதல் முறையாக குப்பை `கியோஸ்க்' எனப்படும்‌ குப்பை சேகரிப்பு மையத்தை குன்னூர் நகராட்சி ஒத்துழைப்புடன் தொடங்கியிருக்கிறோம். இந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு செயல்படும் நேர்த்தையும் அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism