Published:Updated:

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் சிறைத்தண்டனை! டெல்லி அரசு அதிரடி !

தீபாவளி கொண்டாட்டங்கள்

டெல்லியில் பட்டாசு தயாரித்தல், அவற்றை சேமித்தல் மற்றும் அதை விற்பனை செய்தல் ஆகியவை வெடிபொருள் சட்டம் 9-பி பிரிவின்கீழ் குற்றமாகும். மேலும், இதற்கு ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் சிறைத்தண்டனை! டெல்லி அரசு அதிரடி !

டெல்லியில் பட்டாசு தயாரித்தல், அவற்றை சேமித்தல் மற்றும் அதை விற்பனை செய்தல் ஆகியவை வெடிபொருள் சட்டம் 9-பி பிரிவின்கீழ் குற்றமாகும். மேலும், இதற்கு ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

Published:Updated:
தீபாவளி கொண்டாட்டங்கள்

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் 6 மாத சிறைத்தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

deepavali
deepavali
pixabay

இது என்னடா, தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் குற்றமா என்று தோன்றுகிறதா? நமது தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் புகை மாசு அளவு அதிகரிக்கும். குறிப்பாக, தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் அதிகம் வெடிப்பதால், மாசு அளவு இன்னும் அதிகரிக்கும்.

இதைத் தடுக்க டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ``டெல்லியில் பட்டாசு தயாரித்தல், அவற்றைச் சேமித்தல் மற்றும் அதை விற்பனை செய்தல் ஆகியவை வெடிபொருள் சட்டம் 9-பி பிரிவின்கீழ் குற்றமாகும். மேலும் இதற்கு ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்
டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்

டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம், 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ``தியே ஜலாவோ படகே நஹி" (விளக்கை ஏற்றுங்கள், பட்டாசு வேண்டாம்) என்ற பொது விழிப்புணர்வு பிரசாரம் அக்டோபர் 21-ம் தேதி முன்னெடுக்கப்பட உள்ளது. அதே நாளில், டெல்லி அரசு சார்பாக கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.

விளக்கு
விளக்கு

பட்டாசு வெடிக்கும் தடையை அமல்படுத்த, டெல்லி காவல்துறை உதவி ஆணையர்களின்கீழ் 210 குழுக்களும், வருவாய்த்துறை சார்பாக 165 குழுக்களும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு சார்பாக 33 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதோடு பொதுமக்களும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.