Published:Updated:

21 நாள்களில் 2 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு; உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற திண்டுக்கல்!

உலக சாதனை
News
உலக சாதனை

மழைக்காலம் என்பதால் திட்டம் தொடங்கிய 2-வது வாரத்தில் அனைத்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் 100 சதவிகிதம் நிறைந்துவிட்டன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 கோடி லிட்டருக்கும் அதிகமாக மழைநீர் தேக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட அரசு கட்டடங்கள், அரசுப் பள்ளிகளில் நவம்பர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 21 நாள்களில் 611 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் கட்டட மேற்கூரைகளின் அளவைப் பொறுத்து 9,000 லிட்டர் முதல் 18,000 லிட்டர் வரை மழைநீரைத் தேக்கும் விதமாக அமைக்கப்பட்டன. தேக்கிய மழைநீரை உடனடியாகப் பயன்படுத்தும் விதத்தில் மோட்டார் பொருத்தி மேல்நிலைத் தொட்டிக்குக் கொண்டு சென்று பள்ளிகளின் கழிவறைகளில் உபயோகம் செய்யப்பட்டது.

மழைநீர்
மழைநீர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மழைக்காலம் என்பதால் திட்டம் தொடங்கிய 2-வது வாரத்தில் ஏறக்குறைய அனைத்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் 100 சதவிகிதம் நிறைந்து ஒவ்வொரு தொட்டியும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும் கிணறு, போர்வெல், மழைநீர் வடிகால் தொட்டிகளில் சேரும் விதமாகக் கட்டமைக்கப்பட்டன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 கோடி லிட்டருக்கும் அதிகமாக மழைநீர் தேக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக மழைப்பொழிவு 1,000 மில்லி மீட்டர் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மில்லி மீட்டர் மழை பொழியும்போது ஒரு லிட்டர் மழைநீரை சேமிக்கலாம். அதனடிப்படையில், திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள 611 இடங்களில் உள்ள 1,115 கட்டடங்களில் மொத்த பரப்பளவு 1,03,000 சதுர மீட்டர் ஆகும். இதனால் ஒரு ஆண்டுக்கு 10.3033 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடிகிறது. இது ஒரு சராசரி அணையின் நீர் சேமிப்புக்கு இணையானதாகும்.

உலக சாதனை
உலக சாதனை

குறுகிய காலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாவட்ட நிர்வாகம் உருவாக்கியதை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களைச் சார்ந்த 11 ஆய்வாளர்கள் 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து இந்திய துணைக் கண்டத்தில் வேறு எங்கும் இதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்பதால், 4 சாதனை புத்தகங்களிலும் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு திட்டம் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, உலக சாதனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் உலக சாதனைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.