ஏராளமான சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஒரு பக்கம், இயற்கை வளங்களுக்காக தொழில் நிறுவனங்கள் வனங்களைச் சூறையாடுவது இன்னனொரு பக்கம் என, நம் காடுகள் ஒவ்வொரு நாளும் அழிந்துவருவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரசுத் தரப்போ, கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் வனங்களின் பரப்பளவு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்களைத் தருகிறது.

‘எதிலும் நம்பிக்கையற்று இருத்தலே அறிவியல்’ என்கிறார் அறிவியலாளர் ஜே.டி.பெர்னல். 1972 முதல் 1980 வரை இந்திய அரசின் விண்வெளித் துறைத் தலைவராகச் செயல்பட்ட பேராசிரியர் சதீஷ் தவான், அப்படியோர் உண்மையான அறிவியலாளர். அவர் தலைமைவகித்த காலகட்டத்தில், இந்திய நிலப்பரப்பில் பசுமைப் போர்வையின் பங்கு 23 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டது. அப்போது, காடுகளின் பரப்பளவை நிர்ணயிக்கும் அளவீடுகளின்மீது அவர் சந்தேகம்கொண்டிருந்தார். அதனால் அவர், செயற்கைக்கோள் படங்களின்மூலம், நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவை நேர்மையாகக் கணக்கிட முடிவுசெய்தார். அவருடைய மதிப்பீட்டில் காடுகளின் பரப்பளவு 19 சதவிகிதம் எனத் தெரியவந்தது.

‘‘துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பிறகு காடுகளை அளவிடும் வேலையை அவரிடமிருந்து பறித்தது அரசாங்கம். ‘இந்திய வன அளவை நிறுவனம்’ என்னும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. சுதந்திரமாக இயங்க முடியாத அந்த அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்தது அரசாங்கம். இதன்மூலம், காடுகளை அளப்பதில் இருக்க வேண்டிய உண்மையான அறிவியலும் புதைக்கப்பட்டுவிட்டது’’ என்று வருத்தப் படுகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் மொத்த வனப்பரப்பு குறித்து கணக்கிட்டு வெளியிடும். இப்போது, 2019-ம் ஆண்டுக்கான மொத்த வனப்பரப்பளவு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வனப்பரப்பளவு 708,273 சதுர கி.மீ. 2019-ம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, 712,249 சதுர கி.மீ. இரண்டு ஆண்டுகளில் 3,976 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. அதில் மிகவும் அடர்ந்த காடுகள் 1,120 ச.கி.மீட்டரும், அடர்த்தி குறைவான காடுகள் 154 ச.கி.மீட்டரும், திறந்தவெளிக்காடுகள் 2,702 ச.கி.மீட்டர் பரப்பளவும் அதிகரித்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. இது, சூழல் ஆர்வலர்கள் தொடங்கி பலரையும் அதிரவைத்துள்ளது.

இதன் விவரங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன், இந்திய வன அளவை நிறுவனம் இந்தக் கணக்கெடுப்பின்மூலம் ஆடுகின்ற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காடு என்று நாம் எதைச் சொல்வோம்? இயற்கையாக வளர்ந்த மரங்கள், சிற்றுயிர்கள் முதல் பேருயிர்கள் வரையிலான வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொடுத்து, நீராதாரத்தின் மூலமாக விளங்கும் நிலப்பகுதியை `காடு’ என்றழைப்போம். ஆனால், இந்திய வன அளவை நிறுவனம் காடுகளைக் கணக்கிடுவதற்காக வகுத்துள்ள வரையறை, அப்படியொன்றாகத் தெரியவில்லை.

அவர்களுடைய கூற்றுப்படி, ‘ஒரு ஹெக்டேர் நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் மரங்கள் இருந்தாலே, அது காடாகத்தான் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பழத்தோட்டங்கள், பாக்குமரம் போன்ற பண மரப்பயிர் வளர்ப்பு அனைத்தையுமே கணக்கெடுத்துள்ளனர். அதன்படி, இப்போது அதிகரித்துள்ளதில் 2,701 ச.கி.மீட்டர் திறந்தவெளிக்காடுகளே அதிக பங்குவகிக்கின்றன. இத்தகைய கணக்கெடுப்பில் அதிகரித்துள்ள வெறும் 0.13 சதவிகிதத்தை, நாம் காடுகளின் வளர்ச்சி என்று கருதவே முடியாது.

2017-ம் ஆண்டில் 21.54 சதவிகிதமாக இருந்த இந்தியக் காடுகளின் பரப்பளவு, இப்போது 21.67 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் 22,807 ச.கி.மீ வனப் பரப்பளவு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பிலுள்ள 20.4 சதவிகித வனப்பரப்பில், அடர்த்தியான காடுகளின் பரப்பளவு 2.8 சதவிகிதம். அடர்த்தி குறைவான காடுகள் 8.5 சதவிகிதம் உள்ளது. இவை இரண்டுக்கும் நிகராக, 9.1 சதவிகித அளவில் திறந்தவெளிக்காடுகள் அமைந்துள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

அதுகுறித்துப் பேசிய தமிழக தலைமை வன அதிகாரி துரைராசு, ‘‘தமிழகத்தின் வனப்பரப்பு 83.02 ச.கி.மீட்டர் அதிகரித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின்மூலம் காடு மற்றும் அதற்கு வெளியில் உள்ள மரப்போர்வையை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம். காப்புக்காடுகளுக்குள் இருக்கும் இடைவெளியில் மரங்களை நட்டுப் பாதுகாப்பது மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியே விவசாய நிலங்களில் வேளாண் காடுகளை வளர்க்க ஊக்கப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. அதுபோக, நகரங்களில் மாசைக் கட்டுப்படுத்த, அழகுபடுத்த என்று பல்வேறு முறைகளில் மர வளர்ப்புத் திட்டங்களை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார்.

‘‘மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்த்தியான காடுகளை அதிகமாகக்கொண்ட தமிழக நிலப்பரப்பில், அவற்றைவிட அதிகமாகத் திறந்தவெளிக்காடுகளே பதிவுசெய்யப் பட்டுள்ளன. இதற்குக் காரணம், பழத்தோட்டங் களையும் பண மரப்பயிர்களையும்கூட காடுகள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கியதுதான்’’ என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

வடகிழக்கு மாநிலங்களிலோ, அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டின் பதிவில் இருந்த வனப் பரப்பளவிலிருந்து 765 ச.கி.மீட்டர் காடு அழிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் காடுகளுடைய வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியில்தான் சென்றுள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் மொத்த வனப்பகுதி 170,541 ச.கி.மீ. இது, அதன் மொத்த நிலப்பரப்பில் 65.05 சதவிகிதம். மிகவும் அடர்த்தியான, பல்லுயிரிய வளம் நிறைந்த காடுகளைக்கொண்டது வடகிழக்கு இந்தியா.

‘‘சுமார் 70 சதவிகிதக் காடுகளைக்கொண்டுள்ள வடகிழக்குப் பகுதியில் வனப் பரப்பளவு குறைந்ததற்குக் காரணம், இடம் மாறி மாறி அவர்கள் செய்யக்கூடிய விவசாயம்தான். அங்கு அடுத்தகட்டத்தில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’’ என்று கூறியுள்ளார் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

2009-ம் ஆண்டிலிருந்தே வடகிழக்கின் வனப்பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டு தான் இருக்கிறது. 2009-ம் ஆண்டில் 3,199 ச.கி.மீ அழிக்கப்பட்டது. 2013-ல் 628 ச.கி.மீ, 2017-ம் ஆண்டில் 630 ச.கி.மீ மற்றும் 2019-ல் 765 ச.கி.மீ அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 7.98 சதவிகிதம் பங்குவகிக்கும் அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள், நாட்டின் மொத்த வனப் பரப்பளவில் 25 சதவிகிதம் பங்குவகிக்கின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் காடு அழிக்கப்படுவது தொடர்கதையாவதற்கு இந்திய வன அளவை நிறுவனத்தின் இந்த அறிக்கை ஆதாரமாக நிற்கிறது.

பசுமைப் போர்வை என்ற பெயரில் மரங்களை வெறுமனே கணக்கெடுக்காமல், பேராசிரியர் சதீஷ் தவானைப்போல் விவரமாகவும் அறிவியல்பூர்வமாகவும் கணக்கெடுப்பு நடத்தி, இந்திய நிலப்பரப்பில் உள்ள காடுகளின் அளவை நேர்மையாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உண்மையான வனப் பரப்பளவு குறித்த தரவுகள் கிடைக்கும். அவை, வளர்ச்சியைச் சரியாக முன்னடத்திச் செல்ல துணைபுரியும்!