Published:Updated:

வல்லநாடு சரணாலயத்தில் தொடங்கிய `வண்ணத்துப்பூச்சி திருவிழா’ சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

வண்ணத்துப்பூச்சி திருவிழா

சுற்றுச்சூழலின் தரத்தை அளவிடுவதற்கான குறியீடாக, வண்ணத்துப்பூச்சிகள் திகழ்கின்றன. தேனீக்களைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளும் தாவரப் பெருக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.

வல்லநாடு சரணாலயத்தில் தொடங்கிய `வண்ணத்துப்பூச்சி திருவிழா’ சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

சுற்றுச்சூழலின் தரத்தை அளவிடுவதற்கான குறியீடாக, வண்ணத்துப்பூச்சிகள் திகழ்கின்றன. தேனீக்களைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளும் தாவரப் பெருக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.

Published:Updated:
வண்ணத்துப்பூச்சி திருவிழா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழா துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வனக்காப்பு மையம் இணைந்து 'வண்ணத்துப்பூச்சி திருவிழா'வை நடத்தியது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த வண்ணத்துப்பூச்சி திருவிழாவை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

வண்ணத்துப்பூச்சி திருவிழா
வண்ணத்துப்பூச்சி திருவிழா

சுற்றுச்சூழலின் தரத்தை அளவிடுவதற்கான குறியீடாக, வண்ணத்துப்பூச்சிகள் திகழ்கின்றன. தேனீக்களைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளும் தாவரப் பெருக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

பூமியில் சுமார் 20,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கின்றன. அதில் இந்தியாவில் மட்டுமே, 1,300 -க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் இருக்கின்றன. வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.

வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்
வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்

தாவரப் பெருக்கத்தில், மகரந்தச் சேர்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் எண்ணிக்கையில் குறைவது பூமியின் பல்லுயிரிய வளத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்
வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்

வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடமும் மாணவ மாணவிகளையும் ஏற்படுத்தும் வகையில் வண்ணத்துப்பூச்சி திருவிழா நடைபெற்றது.

வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்
வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நேரில் பார்வையிட்ட கனிமொழி எம்.பி. மான்கள், பட்டாம்பூச்சிகள், மயில்கள் அனைத்தையும் தொலைநோக்கி மூலமாகவும் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் பார்வையிட்டார்.

இந்த விழாவில் கனிமொழி எம்.பி. பேசும் போது, ``தோட்டங்களில் தெளிக்கப்படும் ரசாயன விஷம் மூலம் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயம் செய்யும் நிலங்களில் வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் காரணமாக மகரந்த சேர்க்கை நடைபெறாமல் போகிறது. வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்
வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம்

புகைப்படக் கண்காட்சி, சூழலியல் பாதுகாப்பு குறித்த விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், வண்ணத்துப்பூச்சி நடை என முக்கிய விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்திருந்தது. இன்று வல்லநாடு வெளிமான்கள் சரணாலயத்தைப் பார்வையிட்டோம். மிகுந்த பொறுப்போடுப் பாதுகாக்க வேண்டிய, வளமிக்க இந்தச் சூழலியல் மண்டலத்தையும் அதன் அங்கமான பல்லுயிர்களையும் கண்டது புத்துணர்ச்சியளிக்கிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வன அலுவலர் அனிருத் தோமர், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஸ்ரீவைகுண்டம் வனசரக அலுவலர் பிருந்தா, வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திராமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.