Election bannerElection banner
Published:Updated:

தர்மபுரியில் பிடிப்பட்ட காட்டு யானை... முதுமலை காட்டுக்குள் விடப்பட்டது ஏன்?

Wild elephant
Wild elephant

தர்மபுரியில் காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலையில் விடுவித்த வனத்துறையினரின் இச்செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஆண் காட்டுயானை ஒன்று கடந்த சில நாள்களாக உலவி வந்துள்ளது. மேலும் இந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் உண்டு வந்துள்ளது. இந்த யானையைப் பிடிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wild elephant
Wild elephant

இதன் அடிப்படையில் இந்தக் காட்டுயானையைப் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், நேற்று மூன்று மணி நேரம் போராடி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையை கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி இரவோடு இரவாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வந்தனர். முதுமலையின் அடர் வனப்பகுதியான அசுவரமட்டம் பகுதியில் இன்று காலை யானையை பத்திரமாக விடுவித்தனர்.

யானை விடுவிப்பு குறித்து நம்மிடம் பேசிய முதுமலை வனத்துறை அதிகாரி, ``இது 14 வயது மதிக்கத்தக்க இளம் ஆண் யானை. இந்த யானை மனிதர்களைத் தாக்கும் சுபாவம் கொண்டதல்ல. தற்செயலாக ஒன்றிரண்டு எதிர்கொள்ளல்கள் நிகழ்ந்துள்ளன. அவுட்டுக்காய் போன்று ஏதோ ஒன்றைக் கடித்ததில் இதன் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துக்குள் உணவு தேட‌ முடியாத காரணத்தால் விளை நிலங்களைத் தேடி வருகிறது.தொடர்ந்து யானையை விரட்டுவதால் மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்தோம். ஒரு சிலரால் இந்த யானைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிகிறது.

Wild elephant in truck
Wild elephant in truck

எனவே, இதைப் பிடித்து முதுமலையின் அடர் வனத்துக்குள் விடுவித்துள்ளோம். உள்ளூர் மக்களின் எதிர்ப்பு உள்ளது. ரேடியோ காலர் எதுவும் பொறுத்தவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வறட்சி காலம் என்பதால் வனக்குட்டைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்" என்றார்.

தர்மபுரியில் காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலையில் விடுவித்த வனத்துறையினரின் இச்செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு