Published:Updated:

நீலகிரி: காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் 10 ரூபாய் வழங்கப்படும்!

மதுபாட்டில்

இது குறித்து நமது பசுமை விகடன் முகநூல் பக்கத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு திரையிட்டுக் காண்பித்துள்ளனர்.

நீலகிரி: காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் 10 ரூபாய் வழங்கப்படும்!

இது குறித்து நமது பசுமை விகடன் முகநூல் பக்கத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு திரையிட்டுக் காண்பித்துள்ளனர்.

Published:Updated:
மதுபாட்டில்

நீலகிரி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பல மதுக்கடைகள், கிராமப்புறங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள தனியார் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், அலுமினிய ஃபாயில் பேப்பர் கப்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றைத் தாராளமாக விற்பனை செய்கின்றனர். இவற்றை வாங்கும் மக்கள் மதுக்கடை அருகில் இருக்கும் நீர்நிலைகளிலும் வனத்திலும் காலி மதுபாட்டில்களை வீசிச் செல்கின்றர். இதனால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பது ஏற்படுகின்றன.

காலி மதுபாட்டில்
காலி மதுபாட்டில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்த வீடியோ ஒன்றை எமது பசுமை விகடனின் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு திரையிட்டுக் காண்பித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீலகிரியில் காலி மதுபாட்டில்களைத் திரும்ப பெறுவதற்கான ஆக்கபூர்வ திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். முதல் கட்டமாக காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க 15 சேகரிப்பு மையங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து, நீலகிரி டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் அதோட விலையில் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலித்து, மது பாட்டில்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10ஐ திரும்ப வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

காலி மதுபாட்டில்
காலி மதுபாட்டில்

இந்தத் திட்டம் குறித்து தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், ``நீலகிரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறதா? காலி பாட்டில்களை வழங்குவோருக்கு 10 ரூபாயை முறையாகத் திரும்ப வழங்கப்படுகிறதா? என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism