Published:Updated:

சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்; தெரிந்தே செய்யும் தவறுகள்... என்னதான் தீர்வு?

பிளாஸ்டிக் பாட்டில்கள்

சோம்பேறித்தனத்தால் மக்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேட்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தானே என்று தோன்றும், ஆனால் ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் குடிக்கும் குளிர்பானங்களின் எண்ணிக்கை என்னவோ பல லட்சங்களில் இருக்கிறது.

சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்; தெரிந்தே செய்யும் தவறுகள்... என்னதான் தீர்வு?

சோம்பேறித்தனத்தால் மக்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேட்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தானே என்று தோன்றும், ஆனால் ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் குடிக்கும் குளிர்பானங்களின் எண்ணிக்கை என்னவோ பல லட்சங்களில் இருக்கிறது.

Published:Updated:
பிளாஸ்டிக் பாட்டில்கள்

பூமியை விட பொறுமையான ஒரு சுமை தாங்கியை எங்கும் பார்க்க முடியாது. அதனால் தான் வள்ளுவன் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என இந்த பூமியை பெருமைப்படுத்தி கூறுகிறார். இதுநாள் வரை நம்மிடமிருந்து இந்த பூமி எதையும் எதிர்பார்த்து நமக்கு இந்த வாழ்வை கொடுக்கவில்லை. ஆனால் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத இந்த பூமிக்கு, நாம் கொடுப்பது மக்காத குப்பைகளையும், மாசுக்களையும் தான்.

பிளாஸ்டிக் பாட்டில்கள்
பிளாஸ்டிக் பாட்டில்கள்

இந்த பூமியை கெடுப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் செய்து வருகிறது இந்த மனித சமுதாயம். பூமியில் வாழும் உயிரினங்களில் பூமிக்கு கேடு செய்வது மனித இனம் மட்டும் தான்.

நாம் செய்வது 100% பூமிக்கு கேடு விளைவிப்பதாக இருந்தால் 25% மட்டுமே ஒரு சில மனிதர்கள் மரங்களை நட்டும், தூய்மையை பாராட்டியும், நெகிழிகளை ஒதுக்கியும் இந்தப் பூமிக்கு நண்பனாக இருக்கின்றனர். நாமும் அப்படி இருக்கின்றோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய பூமிக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கும் முக்கியமான பொருள் எதுவென்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும், அது நெகிழி குப்பை தான் என்று... ஆம் ஒரு நெகிழி மட்கி இந்த உலகில் தன்மையமாவதற்கு பல நூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன என்று அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதிலும் ஒரு சில நெகிழிகளை மறுசுழற்சி செய்ய செய்ய அதிலிருந்து மோசமான கழிவுகளும், மோசமான பின் விளைவுகளும் இயற்கைக்கு ஏற்படுகிறது என்றும் அறிவியல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்கள்
பிளாஸ்டிக் பாட்டில்கள்

ஆனால் மனித சமுதாயம் நெகிழியை இதனால் வரை பயன்படுத்தாமல் இருந்ததே இல்லை. பல வகையிலும் இன்று நெகிழிகள் நம் பூலோகத்தை ஆட்கொண்டு வருகிறது. அதில் இப்பொழுது அதிகமாக நம் தமிழகத்தில் ஆட்கொண்டிருப்பது குளிர்பானங்களுக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள். ஆம் கேட்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தானே என்று தோன்றும், ஆனால் ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் குடிக்கும் குளிர்பானங்களின் எண்ணிக்கை என்னவோ பல லட்சங்களில் இருக்கிறது.

முன்பெல்லாம் கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானங்கள் வரும். அவற்றை குடித்துவிட்டு திரும்ப கொடுத்து விடுவோம். இதனால் எந்த வகையிலும் இயற்கைக்கு கேடு என்பது விளையாமல் இருந்தது. ஆனால் நாகரீகம் வளர வளர மக்கள் உபயோகிக்கும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் என்னவோ சூழலுக்கு மிக மிக கேடு விளைவிப்பதாக இருக்கிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள்
பிளாஸ்டிக் பாட்டில்கள்

இப்போது தமிழ்நாடு எங்கும் பெரும்பாலான கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது. சிறு பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய ஹோட்டல்களில் வரை இன்று பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே குளிர்பானங்கள் விநியோகிக்கப்படுகிறது.  இதன் விளைவாக குளிர்பானங்களை குடித்துவிட்டு மக்கள் தெருவோரங்களிலும் சாலை ஓரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் தூக்கி எறிந்து செல்கின்றனர்.

 இந்த விநாயகர் சதுர்த்தி உடன் கடலில் கலந்த அதிகமான குப்பை எதுவென்று கேட்டால் அது குளிர்பான பாட்டில்கள்தான் என்று மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவு கடலையும் இந்த குளிர்பான பாட்டில்கள் பாழடித்து வருகிறது. கடலில் மட்டும் தானா நிலத்தில் இல்லையா என்று கேட்டால், எங்கு பார்த்தாலும் மூளை முடுக்குகளில் இந்த நெகிழி குளிர்பான பாட்டில்கள் தென்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவு
பிளாஸ்டிக் கழிவு

பல வர்ணங்களிலும்  இந்த குளிர்பான பாட்டில்கள், பூச்செடிகளிலும், தோட்டங்களிலும், தெருவோரங்களிலும் குப்பைகளாக சிதறி கிடக்கிறது. இதை மறுசுழற்சி செய்யலாம் என இந்த பாட்டில்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை முறை தான் இதை மறுசுழற்சி செய்ய முடியும். இது சூழலுக்கு ஒரு கட்டத்தில் எதிராகவே அமையக்கூடும். இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால் பழைய முறையான கண்ணாடி பாட்டில்களையோ அல்லது சில்வர் டின்களையோ பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

இதையும் விட்டு சென்றால் நாம் பழந்தமிழர்களின் பனையோலையில் குடிக்கும் பதநீரும், இளநீரும், கம்பங்கூழும், கேப்பங்கூழும் என்றுமே நம் உடலுக்கு தீங்கு விளைவித்ததில்லை. ஆனால் நம் மனித சமுதாயமோ இந்த பூலோகத்திற்கும், மனித உடல் நலத்திற்கும் எதிரானவற்றையே எப்பொழுதும் தேடிச் செல்வது பழக்கமாகி விட்டது. இப்படி தேடிச் செல்வதனால் வருங்கால சந்ததிகள் பழம் பெருமைகளையும் மறந்து விடுவர். இந்த நெகிழி குப்பைகளின் மத்தியிலும் மாட்டிக் கொண்டு திணறுவர். இதனால் இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாட்டிலிலும் நாளை நம் சுற்றுச்சூழல்களில் என்ன பாதிப்பு நிகழும் என மனித சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.