Published:Updated:

`Right To Repair' - எலக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்க ஐரோப்பிய யூனியனின் புதிய திட்டம்!

Environment
Environment

`ரைட் டு ரிப்பேர்' (Right to Repair) என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது ஐரோப்பிய யூனியன்.

சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு உலகின் பல அரசுகளும் நிறுவனங்களும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றன. சுற்றுச்சூழல் கெடுவதில் பெரும் பங்கு நெகிழிப் (Plastic) பயன்பாட்டுக்கு உண்டு. நெகிழிப் பயன்பாடு மிகவும் குறைவான காலம் மட்டுமே. ஆனால், அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது மற்றும் அவை பூமிக்கும் கேடு விளைவிக்கும் எனப் பல பின்னடைவுகள் நெகிழிப் பயன்பாட்டில் உண்டு.

ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன்

நெகிழியைப் பயன்படுத்தி நாம் தினசரி பயன்படுத்தும் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. நெகிழியைப் போலவே குறைந்த காலம் மட்டுமே உபயோகப்படுத்த முடிந்த பொருள்களைக் குறைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சிறிதளவு தடுக்க முடியும் என புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது.

5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... ஆஸ்விச் வதைக்கூடம்!

`ரைட் டு ரிப்பேர்' (Right to Repair) என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது ஐரோப்பிய யூனியன். இன்று நாம் மறுபயன்பாடு என்ற வார்த்தையையே மாற்றி அனைத்துப் பொருள்களையும் `யூஸ் அன் த்ரோ' (Use and Throw) ஆகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் முதல் இடத்தில் இருப்பது எலெக்ட்ரானிக் பொருள்கள்தான். இன்றைக்கு நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருள்கள் தவிர, பழுதடைந்த, பயன்படுத்தாத எலெக்ட்ரானிக் பொருள்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். நிச்சயம், கணிசமான ஓர் அளவு இருக்கும். ``இந்த டி.வி-யை ரிப்பேர் பண்ணாலும் வேஸ்ட்தான்பா, அதுக்குப் புது டி.வி-யே வாங்கிடலாம்" என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலையை மாற்றுவதற்குத்தான் ரைட் டு ரிப்பேர்' என்ற திட்டத்தை முன் வைத்திருக்கிறது ஐரோப்பிய யூனியன்.

சுற்றுச்சூழல் சீர்கேடு
சுற்றுச்சூழல் சீர்கேடு

இதன்படி நீண்ட காலம் உழைக்கக்கூடிய, மறுசுழற்சிக்கு உகந்த பொருள்களைக் கொண்டு எலெக்ட்ரானிக் பொருள்களைத் தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். எலெக்ட்ரானிக் பொருள்கள் பழுதடைந்தாலும், பழுதுபார்த்து நல்ல நிலையில் உபயோகிக்குமாறு இருக்க வேண்டும். இவ்வாறு இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளது ஐரோப்பிய யூனியன். கடந்த ஆண்டே வீட்டு உபயோகப் பொருள்களான டி.வி, வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு அந்த விதிகளை அமல்படுத்தியிருந்தது. தற்போது இதை மேலும் விரிவாக்கி மொபைல், லேப்டாப் ஆகியவற்றுக்கும் அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.

`9 மில்லியன் கணினிகளைத் தாக்கிய நெக்கர்ஸ் பாட்நெட்!' - கட்டுக்குள் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட்

இந்தத் திட்டத்தை எலெக்ட்ரானிக்ஸ் துறைக்கு மட்டுமன்றி, டெக்ஸ்டைல்ஸ், பேக்கேஜிங், உணவுத் துறை ஆகியவற்றுக்கும் சேர்த்தே வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது 2050-ம் ஆண்டுக்குள் ஐரோப்பிய யூனியன் முழுவதும் `கிளைமேட் நியூட்ரல்' (Climate Neutral) ஆக மாற வேண்டும் என்பதுதான். எனினும், இந்தத் திட்டம் தொடர்பான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளன. இதைக் கட்டாயமாக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டுமா அல்லது அவரவர் விருப்பமா என்பது போன்ற தகவல்களை ஐரோப்பிய யூனியன் தெரிவிக்கவில்லை. மேலும், இந்தத் திட்டம் எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பதும் தெரியவில்லை. முழுவதுமாக அமலாகி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போதுதான், சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சமாளிக்க பலனளிக்கக்கூடிய திட்டமா இல்லையா என்பது தெரியவரும்.

Environmental pollution
Environmental pollution

இதனுடன் எந்த வகையில் எல்லாம், எலெக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்கலாம், எந்த வகையில் எல்லாம் தேவையில்லாத எலெக்ட்ரானிக் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு