
80 கிலோ எடையுள்ள டியாகோ 80 வருடங்கள் கழித்து தன் இனத்தைச் சேர்ந்த 1,800 ஆமைகளோடு மீதி வாழ்நாளைக் கழிக்க பிறந்தகம் திரும்புகிறது.
மீனவ மக்களுக்குக் குலதெய்வமாக ஆமைகள் விளங்குகின்றன. கோயிலில் ஆமைச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கேரளாவில் அதிகளவில் காண முடியும். கடல் ஆமைகள் ஒரே நேரத்தில் 200 முட்டைகள் இடும். உலகில் 300-க்கும் மேற்பட்ட ஆமை இனங்கள் உள்ளன. ஆமை வகைகள் ஒவ்வொன்றின் ஆயுள் காலமும் வித்தியாசப்படும். அதில், பெரும்பாலான வகைகள் 100 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்கின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிரசித்தி பெற்ற கடலாமைகளில் `ஸ்டிங்க்பாட் (Stinkpot)' என்ற வகை மிகவும் சிறியதாக 110 மில்லி மீட்டர் அளவே இருப்பவை.

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு `கெலோனாய்டிஸ் ஹூடினஸ் (Chelonoidis hoodensis)' ஆமைகளில் இரண்டு ஆண், 12 பெண் இனங்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. இந்த இனத்தைக் காக்கும் பொருட்டு இனப்பெருக்கத்தை அதிகரிக்க தென்மேற்கு கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் உள்ள சேண்டா குரூஸ் தீவில் (Santa Cruz island) சுற்றுச்சூழல் அறிவியலாளர்களால் 1960-ல் ஓர் இனப் பெருக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இனப்பெருக்கத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் ஆமைகளில் ஒன்றுதான் `டியாகோ (Diego)'.
இனப்பெருக்கத்துக்காக இங்கு கொண்டுவரப்படும் முன்னர் 60 வயதான டியாகோ அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியாகோ மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்தது. கெலாபாகஸ் நேஷனல் சர்வீஸ்(PNG) கணக்கின்படி தற்போதுள்ள இந்த ஆமை இனத்தில் 40 சதவிகித ஆமைகளுக்கு டியாகோதான் அப்பா என்று கூறப்படுகிறது.

80 கிலோ எடையுள்ள டியாகோ 80 வருடங்கள் கழித்து தன் இனத்தைச் சேர்ந்த 1,800 ஆமைகளோடு மீதி வாழ்நாளைக் கழிக்க பிறந்தகம் திரும்புகிறது.
இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் மூலம் 2000 ஸ்டிங்க்பாட் குட்டிகள் பிறந்துள்ள நிலையில் நூறு வயதைக் கடந்த டியாகோவுக்கு ஓய்வு (Retirement) கொடுக்கப்பட உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் எஸ்பலோனா தீவுக்கு அதைக் கொண்டு போய் விடத் திட்டமிட்டுள்ளனர்.