Published:Updated:

உயிரிழக்கும் இரண்டாவது கருஞ்சிறுத்தை... நீலகிரியில் தொடரும் வனவிலங்கு மரணங்கள்!

உயிரிழந்த கருஞ்சிறுத்தை
உயிரிழந்த கருஞ்சிறுத்தை

2020 கடந்த பிப்ரவரி மாதம், கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்தது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொலக்கொம்பைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் வந்துள்ளது.

தேயிலைத்தோட்டம்
தேயிலைத்தோட்டம்

வனத்துறை ஊழியர்கள் சென்றுபார்த்து உறுதி செய்தபின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர்கள் உள்ளிட்டோர் கால்நடை மருத்துவர்களுடன் சென்று உடற்கூறாய்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "கொலக்கொம்பை பகுதியில் உள்ள சட்டன் என்ற தனியார் தேயிலைத் தோட்டத்தில் நேற்று சில தொழிலாளர்கள் தேயிலை பறிக்கச் சென்றுள்ளனர். தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை இறந்துகிடப்பதைப் பார்த்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தை

நாங்கள் ஆய்வுசெய்ததில், இறந்தது சுமார் 4 வயது மதிப்புள்ள பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரியவந்தது. மற்ற விலங்குடன் சண்டையிட்டதில் இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் வந்தபின்னரே காரணம் தெரியும்" என்றனர்.

இதுகுறித்து காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பினர், "நீலகிரிக் காடுகளில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மர்ம மரணங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. வனத்துறையும் உரிய காரணங்களை வெளியில் சொல்வதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சக்கொம்பைப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது.

உயிரிழந்த கருஞ்சிறுத்தை
உயிரிழந்த கருஞ்சிறுத்தை

கடந்த பிப்ரவரி மாதம், கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்தது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது, மீண்டும் ஒரு பெண் கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மைக் காரணத்தை ஆய்வுசெய்து, வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு