Published:Updated:

தண்ணீர் மாசுபாடு எதிரொலி: மத்தியப் பிரதேசத்தில் மீன்களுக்கும் கேன்சர்?!

மத்தியப் பிரதேசத்தில் தண்ணீர் மாசுபாட்டால் மீன்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மீன்கள்
மீன்கள்

தண்ணீர் மாசுபாடு மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, நீர் வாழ் உயிரினங்களுக்கும் அது பெரும் ஆபத்தாகிவிடுகிறது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரிசோதித்தபோது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன்கள்
மீன்கள்

தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் மட்டுமல்லாது, ஆறுகளில்கூட இந்த அபாயம் உள்ளது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் மீன்கள் இறப்புகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மீன் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அது அந்த நீர்நிலைகளில் உள்ள மற்ற மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வ்ரேசஸ் மீன்கள்... காரணத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சி

இந்த மீன்கள் மத்தியப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ``அதிகப்படியான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்குகள் நீர்நிலைகளில் படிந்து கிடப்பதுதான் காரணம்” என்று ஆய்வு நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இறந்த மீன்களை மனிதர்கள் உண்பதால், அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், டையரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

மீன்கள்
மீன்கள்

இப்படியாக இறந்து கிடக்கும் மீன்களைக் கண்டறிய வழிகள் உண்டு. அதாவது, `புற்றுநோயால் இறந்த மீன்களின் தோற்றம், இயற்கையான நிறத்திலிருந்து வேறுபட்டு காணப்படும். கண்களைச்சுற்றி வெளிறிய வெள்ளை நிறம் காணப்படும். உடல்பகுதிகளிலும் வெள்ளை நிறம் தென்படும். கன உலோகங்கள், பிளாஸ்டிக், கழிவுநீர் ஆகியவை நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவது மீன்களுக்கு தோல் புற்று நோய் வர காரணமாகிறது என்றும் ஆய்வில் கூறபட்டுள்ளது.