Published:Updated:

அணையை தூய்மைப்படுத்த மிதக்கும் பொக்லைன்; நீலகிரியில் முதல் முறையாக அறிமுகம்!

மிதக்கும் பொக்லைன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணையைத் தூய்மைப்படுத்த மாவட்டத்தில் முதல் முறையாக மிதக்கும் பொக்லைன் இயந்திரத்தை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

அணையை தூய்மைப்படுத்த மிதக்கும் பொக்லைன்; நீலகிரியில் முதல் முறையாக அறிமுகம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணையைத் தூய்மைப்படுத்த மாவட்டத்தில் முதல் முறையாக மிதக்கும் பொக்லைன் இயந்திரத்தை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Published:Updated:
மிதக்கும் பொக்லைன்

மலை மாவட்டமான நீலகிரியில் அதிக எண்ணிக்கையிலான அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிகளவு நீர்மின் உற்பத்தி நிலையங்களை கொண்ட மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணையைத் தூய்மைப்படுத்த மாவட்டத்தில் முதல் முறையாக மிதக்கும் பொக்லைன் இயந்திரத்தை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

மிதக்கும் பொக்லைன்
மிதக்கும் பொக்லைன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆங்கிலேயர் காலத்தில் நீர்மின் உற்பத்திக்காவும் அருவங்காட்டில் உள்ள மத்திய அரசு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலைக்கான தண்ணீர் தேவயைப் பூர்த்தி செய்ய காட்டேரி பகுதியில் இரண்டு அணைகள் கட்டப்பட்டன. தற்போது இந்த அணைகள் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அதிகளவிலான களைச் செடிகள் மற்றும் சேறு நிறைந்திருந்த இந்த அணையை தூய்மைப்படுத்த மிதக்கும் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"எளிமையான முறையில் வேகமாக நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் வகையிலும் வெள்ளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நீலகிரியில் அறிமுகம் செய்திருக்கிறோம்‌.

மிதக்கும் பொக்லைன்
மிதக்கும் பொக்லைன்

ஆகாயத்தாமரை போன்ற களைத் தாவரங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை வேகமாக அகற்ற முடிகிறது. அணைகளின் பராமரிப்புக்கு உகந்ததாக இருக்கிறது'' என நீர்நிலை பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.