Published:Updated:

நஞ்சராயன் குளத்தை ஆக்கிரமித்து கால்பந்து மைதானமா? சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

ஆர்ப்பாட்டம்
News
ஆர்ப்பாட்டம்

நஞ்சராயன் குளத்துக்குட்பட்ட 8.9 ஏக்கர் நிலத்தை கல்வி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் தனியார் பள்ளிக்கு அரசு வழங்கியது. ஆனால், அப்பள்ளி வணிக நோக்கத்துக்காக குளத்தின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் அமைத்துள்ளது-ஈசன் முருகசாமி.

நஞ்சராயன் குளத்தை ஆக்கிரமித்து கால்பந்து மைதானமா? சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

நஞ்சராயன் குளத்துக்குட்பட்ட 8.9 ஏக்கர் நிலத்தை கல்வி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் தனியார் பள்ளிக்கு அரசு வழங்கியது. ஆனால், அப்பள்ளி வணிக நோக்கத்துக்காக குளத்தின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் அமைத்துள்ளது-ஈசன் முருகசாமி.

Published:Updated:
ஆர்ப்பாட்டம்
News
ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தில் 181 வகையான பறவைகள், 76 வகையான தாவரங்களும்,11 வகையான பாலூட்டிகளும் வாழ்ந்து வருகின்றன. நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் 17-ஆவது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அண்மையில் அறிவித்ததுடன், ரூ.7.5 கோடி செலவில் அதற்கான மேம்பாட்டுப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்

இந்நிலையில், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சராயன் குளத்தின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியார் பள்ளி நிர்வாகம் கால்பந்து மைதானம் அமைத்துள்ளதாக கூறி, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாருடன் வாக்குவாதம்
போலீஸாருடன் வாக்குவாதம்

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி கூறுகையில், "கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நஞ்சராயன் குளத்தையொட்டிய பகுதியில் உள்ள நிலங்களை திருப்பூர் மாநகராட்சி கடந்த 2000-ம் ஆண்டு அதன் உரிமையாளர்களிடமிருந்து வாங்கியது. அப்போது, விகாஸ் சேவா டிரஸ்ட் நிறுவனர் ஆண்டவர் ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேர் தங்களுடைய நிலங்களை வழங்கினர். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த முடிவைக் கைவிட்டது.

பின்னர், அந்த நிலம் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் குழுமத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, நஞ்சராயன் குளத்துக்குட்பட்ட 8.9 ஏக்கர் நிலத்தை விகாஸ் சேவா டிரஸ்டுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்துக்கு கல்வி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

ஈசன் முருகசாமி
ஈசன் முருகசாமி

இந்நிலையில், விகாஸ் சேவா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி சார்பில் வணிக நோக்கத்துக்காக விவசாய நிலத்தின் வகைப்பாடு மாற்றப்படாமலும், உள்ளூர் திட்டக் குழமத்தின் அனுமதி பெறாமலும் நஞ்சராயன் குளத்தின் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

நஞ்சாயரன் குளத்தைப் பாதுகாக்கும் வகையில், விகாஸ் சேவா ட்ரஸ்ட்டுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை திரும்ப பெற்று, அந்த நிலத்தை பறவைகள் சரணாலயத்துடன் இணைத்து சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். ஆர்ப்பாட்டத்தில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

கால்பந்து மைதானம்
கால்பந்து மைதானம்

இதுகுறித்து விகாஸ் சேவா ட்ரஸ்ட் நிறுவனர் ஆண்டவர் ராமசாமி கூறுகையில், "நஞ்சராயன் குளத்தையொட்டி, வாங்கப்பட்டுள்ள 8.9 சென்ட் நிலத்துக்காக பெரியாபாளையத்தில் 13.77 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து ரூ. 1.43 கோடிக்கு வாங்கியுள்ளோம். தற்போது, கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ள 90 சென்ட் நிலம் முழுக்க முழுக்க விகாஸ் சேவா ட்ரஸ்டுக்கு உட்பட்ட பட்டா நிலமாகும். மேலும், நீர்வழிப் பாதையில் இருந்து 10 அடி தள்ளியே மைதானம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.