Published:Updated:

`உண்மையில் அது பயத்தில் இருந்தது!' -5 மணிநேரம் படமெடுத்து ஆடிய பாம்பு; ஆரத்தி காட்டிய புதுவை மக்கள்

நல்ல பாம்பு

நல்ல பாம்பு ஒன்று தொடர்ச்சியாக 5 மணி நேரம் படமெடுத்தபடியே நின்ற சம்பவம் புதுச்சேரி மக்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

`உண்மையில் அது பயத்தில் இருந்தது!' -5 மணிநேரம் படமெடுத்து ஆடிய பாம்பு; ஆரத்தி காட்டிய புதுவை மக்கள்

நல்ல பாம்பு ஒன்று தொடர்ச்சியாக 5 மணி நேரம் படமெடுத்தபடியே நின்ற சம்பவம் புதுச்சேரி மக்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
நல்ல பாம்பு

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி நகர். இங்கிருந்த ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டதுதான் இந்த நகர். நேற்று மாலை 6 மணியளவில் இந்த நகரின் பிரதான சாலையில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் சிலர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட இடைவெளியில் உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்.. என்று சத்தம் தொடர்ந்து கேட்டிருக்கிறது. ஆனால், அங்கிருந்த யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

படமெடுத்தபடி நல்ல பாம்பு
படமெடுத்தபடி நல்ல பாம்பு

சிறிது நேரத்தில் சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகரித்ததும் அந்தச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது சத்தம் வரும் திசையில் பார்த்ததும் சுமார் 3 1/2 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்தபடி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்ததோடு அதை அடிக்கவும் முயற்சி செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், நல்ல பாம்பு என்றதும் அங்கிருந்த குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள், `அதை அடிக்க வேண்டாம்' என்று கூறியதோடு அதற்கு கற்பூரம் ஏற்றி வழிபடத் துவங்கினர். அதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் தங்களது மொபைலில் பாம்புடன் செல்ஃபி எடுக்க ஆரம்பித்தனர்.

பாம்பை மீட்கும் வனத்துறை ஊழியர் கண்ணதாசன்
பாம்பை மீட்கும் வனத்துறை ஊழியர் கண்ணதாசன்

நேரம் கடக்கத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் சத்தம் எழுப்பி அதை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், நேரம் செல்லச் செல்ல அது அப்படியே நின்றபடி இருந்தது. அந்தத் தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், 5 மணி நேரம் கடந்து அந்தப் பாம்பு அங்கிருந்து நகராமல் படமெடுத்தபடியே இருந்ததால் மக்கள் செல்ல ஆரம்பித்தனர்.

11 மணியளவில் அப்பகுதி மக்கள் நம்மைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்ததால், வனத்துறை ஊழியர் கண்ணதாசனை அழைத்துக்கொண்டு அங்கு சென்றோம். அதைப் பாதுகாப்பாக மீட்ட அவர், ``குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களையும் வெயில் காலங்களில் ஈரப்பதமுள்ள இடங்களையும் தேடி பாம்புகள் நகர்வது இயற்கை.

நல்ல பாம்பு
நல்ல பாம்பு

தனக்கு ஆபத்து என்று உணராதவரை பாம்பு யாரையும் கடிக்காது. நல்ல பாம்பு என்பதால் இவ்வளவு நேரம் இதைக் கொல்லாமல் விட்டிருக்கிறார்கள். பொதுவாக அருகில் ஏதாவது சத்தம் கேட்கும்போது படமெடுக்கும் பாம்பு சிறிது நேரத்தில் அமைதியாகிவிடும். ஆனால், சாலையோரம் என்பதால் வாகன சத்தம், மனிதர்கள் நடமாட்டம் என தொடர்ச்சியாக சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால்தான் இவ்வளவு நேரம் படமெடுத்தபடியே நின்றிருக்கிறது.

உண்மையில் இந்தப் பாம்பு இவ்வளவு நேரம் பயத்தில்தான் இருந்திருக்கிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் எந்த வகையான பாம்புகளைக் கண்டாலும், அதைக் கொல்லாமல் 0413-2204808 என்ற வனத்துறை எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் அதைப் பாதுகாப்பாக மீட்டு காட்டில் போய்விட்டுவிடுவோம்” என்றார்.